இயற்கை தெய்வம்
இயற்கைத் தெய்வமே உன்னைப்
படைத்தவர் யார் ? உன் வயதென்ன ?
பல்லாயிரம் பல்லாயிரம் பலகோடி
இப்படி வாழ்ந்த நீ இளங்காற்றாய்க்
கொட்டும் அருவியாய் உன் வயதை மறைத்துப்
பொழியும் மழையாய், வானாய்
இறுகிய பாறையாய் உயர்ந்த மலைத்தொடராய்
அழகிய நதியாய் நில்லாது பெரும்
ஓடையாய்ப் பெருக்கெடுத்தாய்:
இளமைபொங்கும் பேரழிலே
உன் இளமையின் இரகசியம்தான் என்ன?
உன் மைந்தரா சந்திர சூரியர்?
அப்படியானால் -ஆழ்கடல்
அதுவும் உன் அங்கமோ?
உன் படைப்பில் பச்சிளம் காடும்
காட்டு விலங்கும் பறவைக் கூட்டமும்
உன் பிள்ளைகளன்றோ!
தாயே பதில் உரைத்திடு நீ
உன் படைப்பில் உயர்ந்தது
எது மானுடப்படைப்பா ?
மனிதன் தானே-
உன்னை அளக்க விழையும் பிள்ளை
அடைமழை வரும் என்கிறான்
காற்று வீசுமா: வெயில் ஏறுமா என
அன்னையே உன்னையே
அளக்கும் மானுடனை வாழவை.
அன்னையே நீ படைத்த
மானுடன் உன்னைத் தடுக்க வல்லானோ?
அன்னை என நான் உனை அழைத்தால் போதாது.
அன்னையின் ஆற்றல் பெற்றெடுத்துப்
பேணுதல் தானே?
ஆக்கவும், சூராவளியாய் அலைக்கழிக்கவும்,
பஞ்ச பூதங்களில் உயிரைக் கலக்கவும்
செய்வதால் தெய்வமானாய்.
உலகில் மும்மூர்த்திகளுக்கும் நீ முதல் மூர்த்தியா?
அருவும் உருவும் இல்லா அனாதியா?
முதலும் முடிவும் இல்லா மூலப்பொருளா?
அண்டத்தை ஆட்டிப்படைக்கும் அகில சக்தியே
உன் புராணத்தை ஆராயாமல் என் மனம் ஆராது
உன் எழிலைக் கண்டவள் நான்
ஆழ்கடலில் வண்ணஜாலமாக
உன் உயர் செல்வத்தைக் கொட்டியவளே
உலகில் பச்சைப் பசுங்காடாய்
வயலாய்ப் பாய்விரித்தயே!
அற்புதமாய் ஆலைக்கெனக் காற்றாய்
வீசிளங் காற்றாய் மூச்சாய்
அகிலமெல்லாம் அயராது சுற்றுபவளே
அயராது உன்னை ஆராயாமல்
வணங்கி ஆறுதல் பெறவா?
முடிவில்லாப் பரம்பொருள் நீ
உன்னைத் துதித்தலே இனி தருமம்
முது மாதாநீ, மண்மீது வண்ணமலராய்
வந்து மலர்ந்த சிரிப்பைக்
கண்களிலே கண்டு மனத்திலே பதித்துக்
காலமெல்லாம் களித்திருப்பேன்
உன் படைப்பில் நான்.
கண்டுவந்த இயற்கை தந்த போதையிது
என மொழிபவரும் கூறட்டும்
மற்றவரும் சேரட்டும் என்னோடு
இயற்கைத் தெய்வமே உன்னைப்
படைத்தவர் யார் ? உன் வயதென்ன ?
பல்லாயிரம் பல்லாயிரம் பலகோடி
இப்படி வாழ்ந்த நீ இளங்காற்றாய்க்
கொட்டும் அருவியாய் உன் வயதை மறைத்துப்
பொழியும் மழையாய், வானாய்
இறுகிய பாறையாய் உயர்ந்த மலைத்தொடராய்
அழகிய நதியாய் நில்லாது பெரும்
ஓடையாய்ப் பெருக்கெடுத்தாய்:
இளமைபொங்கும் பேரழிலே
உன் இளமையின் இரகசியம்தான் என்ன?
உன் மைந்தரா சந்திர சூரியர்?
அப்படியானால் -ஆழ்கடல்
அதுவும் உன் அங்கமோ?
உன் படைப்பில் பச்சிளம் காடும்
காட்டு விலங்கும் பறவைக் கூட்டமும்
உன் பிள்ளைகளன்றோ!
தாயே பதில் உரைத்திடு நீ
உன் படைப்பில் உயர்ந்தது
எது மானுடப்படைப்பா ?
மனிதன் தானே-
உன்னை அளக்க விழையும் பிள்ளை
அடைமழை வரும் என்கிறான்
காற்று வீசுமா: வெயில் ஏறுமா என
அன்னையே உன்னையே
அளக்கும் மானுடனை வாழவை.
அன்னையே நீ படைத்த
மானுடன் உன்னைத் தடுக்க வல்லானோ?
அன்னை என நான் உனை அழைத்தால் போதாது.
அன்னையின் ஆற்றல் பெற்றெடுத்துப்
பேணுதல் தானே?
ஆக்கவும், சூராவளியாய் அலைக்கழிக்கவும்,
பஞ்ச பூதங்களில் உயிரைக் கலக்கவும்
செய்வதால் தெய்வமானாய்.
உலகில் மும்மூர்த்திகளுக்கும் நீ முதல் மூர்த்தியா?
அருவும் உருவும் இல்லா அனாதியா?
முதலும் முடிவும் இல்லா மூலப்பொருளா?
அண்டத்தை ஆட்டிப்படைக்கும் அகில சக்தியே
உன் புராணத்தை ஆராயாமல் என் மனம் ஆராது
உன் எழிலைக் கண்டவள் நான்
ஆழ்கடலில் வண்ணஜாலமாக
உன் உயர் செல்வத்தைக் கொட்டியவளே
உலகில் பச்சைப் பசுங்காடாய்
வயலாய்ப் பாய்விரித்தயே!
அற்புதமாய் ஆலைக்கெனக் காற்றாய்
வீசிளங் காற்றாய் மூச்சாய்
அகிலமெல்லாம் அயராது சுற்றுபவளே
அயராது உன்னை ஆராயாமல்
வணங்கி ஆறுதல் பெறவா?
முடிவில்லாப் பரம்பொருள் நீ
உன்னைத் துதித்தலே இனி தருமம்
முது மாதாநீ, மண்மீது வண்ணமலராய்
வந்து மலர்ந்த சிரிப்பைக்
கண்களிலே கண்டு மனத்திலே பதித்துக்
காலமெல்லாம் களித்திருப்பேன்
உன் படைப்பில் நான்.
கண்டுவந்த இயற்கை தந்த போதையிது
என மொழிபவரும் கூறட்டும்
மற்றவரும் சேரட்டும் என்னோடு
No comments:
Post a Comment