மாரி அம்மன் திருவிழா
திருவிழா நன்னாளில்
திருநீரு நெற்றியிலிட்டு
திக்கெல்லாம் திருமகளாய்--
தீக்கும் வேய்யில் வரும்முன்னே
தீம்பாவை ய் மகளீரெல்லாம்
ஆகோ அம்மாகோ என
அம்மனையே வேண்டி நின்று
அமராவதி நீர் அதனை
அள்ளிச்சென்றார் குடம்தனிலே அள்ளி முடித்தக் கூந்தலிலும்
அள்ளிச் சொருகிய சேலையிலும்
அமராவதி நீர் சொட்ட
அற்புதமாய் நீர்க்குடம் ஆட
ஆரணங்கும் கூடி அங்கே
அம்மனை மாரி தாயென
அனுதினமும் நீராட்ட
அம்மனுக்குத் தீச்சட்டி பலவாறு
அலகு குத்திப் பலவாறு
கூட்டமாய்ப் பலர் வருவார் அங்கே
மாரி அம்மன் மனம் குளிர
மாரியாத்தா கோயிலெங்கும்
மாரிபொழிந்த நீர்போல
மாரிகுளிர வேப்பிலையும்
மாரிக்காக உருவாரங்களும்
மாரியம்மா கண்திறக்கக் கண்ணடக்கம்
மாரிக்காக உப்பும் மிளகும்
மாரிமாரி வழங்கிடவே
மாரிக்காக முளைப்பாரி
மாரிமாரி வருகுதம்மா.
தெருவெங்கும் மக்கள் கூட்டம்
தெருவெங்கும் திருக்கோலம்
தெருவெங்கும் மாவிளக்கு
தெருவெல்லாம் ஒயிலாட்டம்
கரகாட்டம் உண்டங்கே கரூரில்
காவடியாட்டம் பலவாறு
கணக்கின்றிப் பூச்சொறிதல்
ஒயிலாட்டம் மயிலாட்டம்
புலியாட்டம் சிலம்பாட்டம்
பூவானம் வானத்தில்
அபிஷேக ஆராதனை
ஆனபின் அம்மனக்கு
அந்தியிலே பல்லக்கு
\ ஆலயத்தில் புறப்பாடு
ஆனந்தத் தரிசனமாம்
ஆனந்தக் பரவசமாய்
ஆனந்தக் கண்காட்சி
ஆனந்த வெள்ளத்திலே
ஆழ்ந்ததே மக்கள் மனம்.
திருவிழா நன்னாளில்
திருநீரு நெற்றியிலிட்டு
திக்கெல்லாம் திருமகளாய்--
தீக்கும் வேய்யில் வரும்முன்னே
தீம்பாவை ய் மகளீரெல்லாம்
ஆகோ அம்மாகோ என
அம்மனையே வேண்டி நின்று
அமராவதி நீர் அதனை
அள்ளிச்சென்றார் குடம்தனிலே அள்ளி முடித்தக் கூந்தலிலும்
அள்ளிச் சொருகிய சேலையிலும்
அமராவதி நீர் சொட்ட
அற்புதமாய் நீர்க்குடம் ஆட
ஆரணங்கும் கூடி அங்கே
அம்மனை மாரி தாயென
அனுதினமும் நீராட்ட
அம்மனுக்குத் தீச்சட்டி பலவாறு
அலகு குத்திப் பலவாறு
கூட்டமாய்ப் பலர் வருவார் அங்கே
மாரி அம்மன் மனம் குளிர
மாரியாத்தா கோயிலெங்கும்
மாரிபொழிந்த நீர்போல
மாரிகுளிர வேப்பிலையும்
மாரிக்காக உருவாரங்களும்
மாரியம்மா கண்திறக்கக் கண்ணடக்கம்
மாரிக்காக உப்பும் மிளகும்
மாரிமாரி வழங்கிடவே
மாரிக்காக முளைப்பாரி
மாரிமாரி வருகுதம்மா.
தெருவெங்கும் மக்கள் கூட்டம்
தெருவெங்கும் திருக்கோலம்
தெருவெங்கும் மாவிளக்கு
தெருவெல்லாம் ஒயிலாட்டம்
கரகாட்டம் உண்டங்கே கரூரில்
காவடியாட்டம் பலவாறு
கணக்கின்றிப் பூச்சொறிதல்
ஒயிலாட்டம் மயிலாட்டம்
புலியாட்டம் சிலம்பாட்டம்
பூவானம் வானத்தில்
அபிஷேக ஆராதனை
ஆனபின் அம்மனக்கு
அந்தியிலே பல்லக்கு
\ ஆலயத்தில் புறப்பாடு
ஆனந்தத் தரிசனமாம்
ஆனந்தக் பரவசமாய்
ஆனந்தக் கண்காட்சி
ஆனந்த வெள்ளத்திலே
ஆழ்ந்ததே மக்கள் மனம்.
No comments:
Post a Comment