மனிதர்கள் பலவகை
அடுத்த வேளை உணவைத்தேடும்
மனிதனும் உண்டு,
அடுத்தவர் பணப்பை பறிக்கும்
மனிதரும் உண் டு
அதே வேளையில் பணத்திற்காக
நாளும் உழைப்பவரும்
புகழைத்தேடி செல்பவரும்
போகத்தை தேடி ஓடுபவரும்
மோகத்தை தேடி ஓடுபவரும் பலர்;
சோகமாய்ச் சோம்பித்திரிபவரும்
ஆடிக் கூத்தடிப்பவரும்
ஆன்மீகம் பேசி வாழ்பவரும் சிலர்
முடிவில் மூச்சடங்கிப்போய்-யாவரும்
முன்னோர் சென்ற இடம் போய்ச் சேருவரே
மழலைச் செல்வம்
குழந்தைச் செல்வ மலர்ச்சிரிப்பில்
குளிர்ந்து உள்ளம் மலர்ந்துவிடும்
குளிர்ச்சியான பார்வையிலே
குளிர்ந்த நெஞ்சம் உவந்திருக்கும்
தத்தி வரும் நடைகண்டே
தளிர் நடையும் விரைவாகும்
தனித்தன்மை நீங்கிவிடும்
தனித்த சுகம் கூடிவிடும்
குழந்தைச் செல்வ மழலையிலே
குவிந்த செல்வமென மனம் மகிழும்
குறைதீர்க்க வந்த பிள்ளை
குமிழ்ச் சிரிப்பில் வந்த கிள்ளை.
அடுத்த வேளை உணவைத்தேடும்
மனிதனும் உண்டு,
அடுத்தவர் பணப்பை பறிக்கும்
மனிதரும் உண் டு
அதே வேளையில் பணத்திற்காக
நாளும் உழைப்பவரும்
புகழைத்தேடி செல்பவரும்
போகத்தை தேடி ஓடுபவரும்
மோகத்தை தேடி ஓடுபவரும் பலர்;
சோகமாய்ச் சோம்பித்திரிபவரும்
ஆடிக் கூத்தடிப்பவரும்
ஆன்மீகம் பேசி வாழ்பவரும் சிலர்
முடிவில் மூச்சடங்கிப்போய்-யாவரும்
முன்னோர் சென்ற இடம் போய்ச் சேருவரே
மழலைச் செல்வம்
குழந்தைச் செல்வ மலர்ச்சிரிப்பில்
குளிர்ந்து உள்ளம் மலர்ந்துவிடும்
குளிர்ச்சியான பார்வையிலே
குளிர்ந்த நெஞ்சம் உவந்திருக்கும்
தத்தி வரும் நடைகண்டே
தளிர் நடையும் விரைவாகும்
தனித்தன்மை நீங்கிவிடும்
தனித்த சுகம் கூடிவிடும்
குழந்தைச் செல்வ மழலையிலே
குவிந்த செல்வமென மனம் மகிழும்
குறைதீர்க்க வந்த பிள்ளை
குமிழ்ச் சிரிப்பில் வந்த கிள்ளை.
No comments:
Post a Comment