தாலாட்டு
உன்னில் தனித்திறமை
உண்டென்று தினம் உரைப்பேன்
பாவைக்கு பாட்டில் திறமை
பசி தீர்க்கத் தகப்பனுக்குத் தொழில் திறமை
பாட்டனுக்குப் பொருள் சேர்க்கத் திறமை
பசிபோக்கும் அருஞ்சுவை ஆக்க
அன்னைக்குத் தனித் திறமை;
அண்ணனுக்குத் தனித்திறமை
ஆலையில் உற்பத்தியில்
அஞ்சலைக்குத் தனித்திறமை;
அழகிய தாலாட்டில்
பாலகனே உனக்குப் பலதிறமை
பார்த்தே அதில் உயர்ந்துவிடு
பார்போற்ற வாழ்ந்திடுவாய் !
தூய்மை
\
மனத்தூய்மை வேண்டுமென ஞானி விழைகின்றான்
மக்கள் உடல் தூய்மையினை மனம் விரும்பி ஏற்கும்
மகளிற் மனைத் தூய்மை செய்வதிலே
நாளும் செல்லுமே
மாந்தர் செயல் தூய்மை வேண்டுவது
அவர் தொழிலே
மாநிலத்தில் தூய்மை வேண்டுமெனத்
தெய்வம் கருதுவதால்
மதிக் கூர்மையுடனே
விண்வெளித் தூய்மை செய்திடுவோம்
மருந்தின்றி வாழ முதல் நீர்தூய்மை வேண்டும்
மனைச்சுற்றம் சூழல் தூய்மை நம்மவர் கையில்
மலைச்சாரல் பசும்காடும் தரும் தூயக்காற்றை
மதியுள்ளோர் எல்லாம் விரும்புவது தூய்மை
மனம் உவந்து நாமும் தூய்மை செய்வோம் வாரீர்!
உன்னில் தனித்திறமை
உண்டென்று தினம் உரைப்பேன்
பாவைக்கு பாட்டில் திறமை
பசி தீர்க்கத் தகப்பனுக்குத் தொழில் திறமை
பாட்டனுக்குப் பொருள் சேர்க்கத் திறமை
பசிபோக்கும் அருஞ்சுவை ஆக்க
அன்னைக்குத் தனித் திறமை;
அண்ணனுக்குத் தனித்திறமை
ஆலையில் உற்பத்தியில்
அஞ்சலைக்குத் தனித்திறமை;
அழகிய தாலாட்டில்
பாலகனே உனக்குப் பலதிறமை
பார்த்தே அதில் உயர்ந்துவிடு
பார்போற்ற வாழ்ந்திடுவாய் !
தூய்மை
\
மனத்தூய்மை வேண்டுமென ஞானி விழைகின்றான்
மக்கள் உடல் தூய்மையினை மனம் விரும்பி ஏற்கும்
மகளிற் மனைத் தூய்மை செய்வதிலே
நாளும் செல்லுமே
மாந்தர் செயல் தூய்மை வேண்டுவது
அவர் தொழிலே
மாநிலத்தில் தூய்மை வேண்டுமெனத்
தெய்வம் கருதுவதால்
மதிக் கூர்மையுடனே
விண்வெளித் தூய்மை செய்திடுவோம்
மருந்தின்றி வாழ முதல் நீர்தூய்மை வேண்டும்
மனைச்சுற்றம் சூழல் தூய்மை நம்மவர் கையில்
மலைச்சாரல் பசும்காடும் தரும் தூயக்காற்றை
மதியுள்ளோர் எல்லாம் விரும்புவது தூய்மை
மனம் உவந்து நாமும் தூய்மை செய்வோம் வாரீர்!
No comments:
Post a Comment