Sunday, February 17, 2013


                நதி சொன்ன சேதி 


பாதை அங்கே போகிறது மலையை நோக்கி
பாதை செல்லுமிடமங்கே ஜென்னர் என்பர்
பாதை இருபுறமும் நிற்பதங்க்கே ஓங்கிவளர்ந்த மரங்கள் பல
பாதை முடிவில் தெரிகிறது கிசேல்கிரேக் எனும் இருதள
                                           மாளிகை

மாளிகையின் மேல்தளத்தை சென்றடைந்தோம்
மாளிகை மேலிருந்து வந்தவழி தெரிகுதய்யா
                                   பாம்புபோல
மாளிகை முன்னாலே ரஷ்ய நதி; அதனுடன்
                      கலக்குதைய்யா அட்லான்டிக்கடல்
மாளிகையில் வந்ததங்கே சூரிய ஒளி ச்ன்னல் வழியே

நதி அங்கு ஓடுவது அமைதியாக; கடலும் அதனை
                            அணைப்பதும் அமைதியாக!
நதி வழி நெடுக ஆடி, ஓடி, பாறைமேல் மோதி
                            அமைதியானதங்கே!
நதியை ஏற்றகடலுமங்கே அலையின்றி தழுவி நின்றதே!
நதி கூறும் செய்தி ஒன்று எனக்கு அங்கு
வாழ்நாளில் நானும் பல ஆடி, ஓடி அலைந்தது போதும்
வாழ்நாள் முடிவில் அமைதியாக இயற்கை அன்னையுடன்
                              இணைந்து விடு என்பதுதான்!

தேவி ஜகா 

Monday, February 11, 2013

தமிழ் மனம் பரவும்

      தமிழ் மணம் பரவும்

இனிது இனிது தமிழ்மொழி இனிது
இனிது இது என சங்கம்வைத்து தமிழ்
                  வளர்தனர் மூவேந்தர்
இனிய தமிழ் இன்றுசெம்மொழியாக தமிழகமட்டுமின்றி
இனிய மொழியாக மற்ற மாநிலங்களிலும், மற்ற
                       நாட்டிலும் வளருதல் காணீர்
தமிழ் மொழி சிங்கப்பூர் அரசு மொழியாவதும் காணீர்
தமிழ் இன்று மலேசியாவிலும் வளருதல் கண்கூடு
தமிழ் ஐரோப்பிய ஜி.யு.போப் போன்ற ஆன்றோர்
                        போற்ற உயர்ந்த்து அன்று
தமிழ் சங்கம் பலதோன்ற அமெரிக்க நாடெங்கும் தமிழ்
                         செம்மொழியை போற்றினர்
த்மிழ் கடல் கடந்து சென்றதால் கலிபோர்னியாவில்
                    தமிழ் வகுப்பில் கற்று உயர்வர்
தட்டு நிறைய லட்டு பாட்டு காலத்திற்கு ஏற்ப மாறி
                    தமிழ் பாட்டு பாடிய
என் இனிய பேத்தி அனிகா படித்து உயர்வதைக் கண்டு
                    மனம் மகிழுதே

தேவி ஜகா

Sunday, February 10, 2013

தன் நிறைவு

      தன் நிறைவு

தன் நிறைவைப் பணம் தருவதில்லை
தன் நிறைவைக் கல்வி அருளவில்லை
தன் நிறைவை மக்கள் அளிக்கவில்லை 
தன் நிறைவை மனம் பெற வேண்டும்
தன் நிறைவு வாழ வழிவகுக்கும்
தன் நிறைவு மன மகிழ்வைத்தரும்
தன் நிறைவு ஆத்ம நலம் தருமே.

தேவிஜகா

சிற்றூர்

                     சிற்றூர்

நாணிச்சிலிர்க்கும் பயிரைக்கண்டேன்
நான் அங்கு உழைப்பைக் கண்டேன்
நாரைக்கூட்டம் பறக்கக் கண்டேன்
நாலாவிதப் பயிரைக் கண்டேன்

தென்னந் தோப்பில் குலையைக் கண்டேன்
தெவிட்டாத சுகம்தரும் நதியைக் கண்டேன்
தென்றல் அலைக்கும் மரங்கள் கண்டேன்
தெம்மாங்கு பாடும் உழவர் கண்டேன்.

அல்லிக்குள்ம் பல அங்குக் கண்டேன்
அங்கு நீந்தும் வாத்தினம் கண்டேன்
ஆரணங்கு பலரும் நீர் சுமக்கக் கண்டேன்
கோயில்குளம் பல ஊரெங்கும் கண்டேன்

கோடைக்காலம் தனில் ஙுங்குக் குவியல் கண்டேன்
நகரத்து வேகம் அறியா வாணிபம் கண்டேன்
நவில்பவர் வாயில் தமிழைக்கேட்டேன்
நலிந்து போகாத பண்பை கண்டேன்

நல்ல தமிழ்ச் சொல்லைக்கேட்டேன்
உழைக்கும் மக்களின் ஊக்கம் கண்டேன்
உற்றார் பலரை விரும்புதல் கண்டடேன்
உண்மை உழைப்பின் வாழ்வைக் கண்டேன்
உண்மையில் நாடு சிற்றூரில் வாழ்தல் கண்டேன்

தேவிஜகா


பரம்பரை

    பரம்பரை

பரம்பரைக்கு அடிகோலும் மரபணு என்றுரைப்பர்
பரம்பரை வழித் தோன்றுவது தோற்றம்
பரம்பரையில் தொடரும் பல்வகைக் குணங்கள்
பரம்பரையில் தொடரும் பலவகை நோய்கள்
பரம்பரையாய் வருபவை அறிவுடமையாகும்
பரம்பரையைத் தொடரும் பாவ புண்ணியம் எனவே
பாரம்பரியம் சாகாமல் வாழும் சந்ததி உள்ளவரை
பாரம்பரியம் வாழ, நன்கு வாழ்ந்து முன்னோர்கள்
பாரம்பரியத்தை நிலைநிறுத்த வேண்டினர்
பாரம்பரியத்தைக் காத்திட வேண்டி
பாரதத்தில் பண்போடு வாழ்வோம் என்றும்.

தேவிஜகா

Saturday, February 9, 2013

நெஞ்சுக்கு நேர்


நெஞ்சுக்கு நேர்

நேர்மை இன்று எங்கு  போயிற்று?
நேர்மை யற்ற பேச்சு!
நேர்மை இல்லா மாந்தர்!
நேர்மை யற்ற ஊழியர்!
நேர்மை இன்றி அரசாட்சி!
நேர்மை யற்ற கல்வி!
நேர்மை எங்கு நிற்கும்?
நேர்மை வணிகத்தில் வேண்டும் !
நேர்மை நெஞ்சில் வேண்டும் !
நேர்மை வாழ வேண்டும்!

நேர்மையை சாகவிடுவோமோ?
என்னில் நேர்மை உண்டு
உன்னில் நேர்மை உண்டு
நம்மில் நேர்மை உண்டு
என்னும் கீதம் வேண்டும்
என்றும் சிரார் சிட்டாய் வாழவேன்டும்
என்றும் வையகம் தளைத்து ஒளிர வேண்டும்
என்றும் உறவு உண்மையாய் இருத்தல்வேண்டும்
என்றும் உள்ளம் உவகைகொள்ள வேண்டும்

தேவிஜகா

தாய்

               தாய்

தாய்மைக்கு ஓர் விளக்கம் என் தாய்
தாய்மைக்கு ஓர் உச்சம் என் தாய்
தாய்மை  என்றால் சுமப்பதும் ஊட்டுவதும்
                             மட்டும் அல்ல
தாய் நீ தான் என்னை வழி நடத்தி வாழவைத்தாய்
தாய் தந்த உருவமிது வளர்த்ததும் நீயே!
நீ சொல்லாமல் நான் கற்ற பாடங்கள் பல
நீ எனக்கு முன் உதாரணம் அடிப்படையில்
மண்ணில் செய்தால் அது மண் பாண்டம்
பொன்னில் செய்தால் அது பொன் பாண்டம்

கமலத்தம்மாவின் உதிரத்தாலும், மனத்தாலும்
              உருவாகியது இந்த தோற்றமும் குணநலமும்
இந்த மன உறுதியும் நேர்மையும் எத்தனை பேருக்குக் கிட்டும்?

தேவிஜகா

சந்ததி

        சந்ததி

ஆழ்கடலில் உதித்தமுத்துக்களே
                  ரோஹித், ரக்க்ஷித்
ஆபரணத்துக்குகந்த கற்களே காவியா, அனுஷா
நவரத்தின மாலையே அனிக்கா
நீங்கள் நாலும் கற்று நன்கு வாழ வேண்டும்
நாடும் உலகும் போற்ற வாழ வேண்டும்
நாட்டையும் வீட்டையும் உலகையும்
                    காக்க முன்வரவேண்டும்
தனிமுத்தாயும், விலையுயர் கற்களாயும்
நவரத்தினமாலையும் அணிந்து மகிழமட்டுமல்ல
உலகுக்கு உயர்வுதரும் ஆக்கம் தேடவேண்டும்!

தேவிஜகா




                          

வாழ்க்கை துணை

             வாழ்க்கை துணை

வாழ்கைத்துணை நலம் இருபாலருக்கும் ஒன்றே
வாழ்க்கை என்னும் படகில் துடுப்பை
                        இருவருமே போட
வாழ்வு இனிதாகும், சுகமாகும் என்றும்
அடிவாங்கும் மாதரசியும்இல்லத்தில் உண்டு
அடிதாங்கா  மனமுடைய கணவரும் உண்டு
இடிதாங்கும் பாறையான மனையாளும் உண்டு
ஈடில்லா குனவதியும், குணவானும் உண்டு
ஈட்டிவிட்டால் விட்டுகொடுக்கும்
                           மனம் வாழ்வில் இன்று
துணைதானே இவ்உலகில் நிலையாக வேண்டும்
துணை இருந்தால், சாய்ந்து கொள்ள தூண் போல வாழ்வில்
துணை நலம் காக்க இல்லறம் இனிதாகச் செல்லும்.

தேவிஜகா

MANA MARRAM

            மனமாற்றம்

மனமே நீ அமைதி கொள்
மனமே நீ நிறைவு கொள்
மனமே நீ மகிழ்ந்திரு
மனமே நீ பிறரைப் போற்று
மனமே நீ உற்சாகப்படு
மனமே நீ உற்சாகப்படுத்து
மனமே நீ தான் நான்.

தேவிஜகா

Thursday, February 7, 2013


சித்திரைப் பெண்


சித்திரை பூத்ததும் பூத்தது வேம்பு.
                          கசந்ததோ?
சித்திரை, மக்களுக்கு முன்நின்று மருந்தாகவன்றோ
                                    தந்திட்டாள்!
சித்திரை அவள்ததன்னை வசந்தமென வரவேற்க
சித்திரை பூமி எங்கும் பூத்து குலுங்கினாள்
சித்திரை பெண் தன் பூச்சிரிப்பு போதாது என
சித்திரை மாதம் முழுதும் கனிகளை தாங்கினாள்
தித்திக்கும் வாழையும் தேன்பலாவும்
                                 அறுஞ்சுவை மாங்கனியும்
தீந்தமிழ் அன்னையாம் தமிழகத்திற்கும் தந்திட்தாள்
திகட்டாதோ அச்சுவை எனில்
திகட்டாமல் இனிப்பாக நினைவில் நிற்கும்
                                  அடுத்த வசந்தம் வரை



தேவி ஜகா

உலகப்புதுமலர் ஒலிவியா
                   
சின்னஞ் சிறுவயதில் தம்பி நீ
சிரித்து தவழ்ந்து வந்தாய்
பின்னே மருத்துவராய் கைதூக்கி
பிறருக்கு உதவி செய்தாய்!

கண்களின் காந்தவீச்சில்  உன் மகள்
பிரேயனைக் கவர்ந்து விட்டாள்!
இன்றோ உலகப் பேரொளி பேத்தி
ஒலிவியா பிறந்து விட்டாள்

அன்றலர்ந்த மலரான குழந்தை சிறப்பினை
                         என்னவென்றுரைப்பேன்?
இன்னதென விளங்கா வேரினை எங்கு
                          சென்றுகாண்பேன்?

தந்தை வழிவோரோ  ஜப்பானும், ரஷ்யாவும் ஆகும்
பாட்டன் அவன் மணந்தான் ஐரிஷ் பெண்தன்னையே
தாய் வழிப்பாட்டன் நீயோ திராவிட இந்தியன் ஆவாய்
கருர் சுந்திரம் பிள்ளையின் அமெரிக்காவில் வேரூண்றிய இளய மகன்
தாய் அவளோ பெற்றதாயிக்கு ஜுயிஷ் பரம்பரையாம்
முப்பாட்டன் உன் முன்னாலே ஐரோப்பிய வெள்ளை துரையுமாவார்
இத்துணை நாடுகளின் சிறப்போடு மண்ணீல் உதித்தவளாம்
அவள் தன்னை கண்டறிய உள்ளம் உவகை கொள்ளுமே
இதனை அறிய என் அன்னை இன்று இல்லையே
உடன் பிறந்த நாங்கள் அறுவரும் உன்னுடன் என் குடும்பதுடன்
                            வாழ்துகிறோம்.

Thursday, January 31, 2013