Sunday, February 10, 2013

சிற்றூர்

                     சிற்றூர்

நாணிச்சிலிர்க்கும் பயிரைக்கண்டேன்
நான் அங்கு உழைப்பைக் கண்டேன்
நாரைக்கூட்டம் பறக்கக் கண்டேன்
நாலாவிதப் பயிரைக் கண்டேன்

தென்னந் தோப்பில் குலையைக் கண்டேன்
தெவிட்டாத சுகம்தரும் நதியைக் கண்டேன்
தென்றல் அலைக்கும் மரங்கள் கண்டேன்
தெம்மாங்கு பாடும் உழவர் கண்டேன்.

அல்லிக்குள்ம் பல அங்குக் கண்டேன்
அங்கு நீந்தும் வாத்தினம் கண்டேன்
ஆரணங்கு பலரும் நீர் சுமக்கக் கண்டேன்
கோயில்குளம் பல ஊரெங்கும் கண்டேன்

கோடைக்காலம் தனில் ஙுங்குக் குவியல் கண்டேன்
நகரத்து வேகம் அறியா வாணிபம் கண்டேன்
நவில்பவர் வாயில் தமிழைக்கேட்டேன்
நலிந்து போகாத பண்பை கண்டேன்

நல்ல தமிழ்ச் சொல்லைக்கேட்டேன்
உழைக்கும் மக்களின் ஊக்கம் கண்டேன்
உற்றார் பலரை விரும்புதல் கண்டடேன்
உண்மை உழைப்பின் வாழ்வைக் கண்டேன்
உண்மையில் நாடு சிற்றூரில் வாழ்தல் கண்டேன்

தேவிஜகா


No comments:

Post a Comment