உலகப்புதுமலர் ஒலிவியா
சின்னஞ் சிறுவயதில் தம்பி நீ
சிரித்து தவழ்ந்து வந்தாய்
பின்னே மருத்துவராய் கைதூக்கி
பிறருக்கு உதவி செய்தாய்!
கண்களின் காந்தவீச்சில் – உன் மகள்
பிரேயனைக் கவர்ந்து விட்டாள்!
இன்றோ உலகப் பேரொளி பேத்தி
ஒலிவியா பிறந்து விட்டாள்
அன்றலர்ந்த மலரான குழந்தை சிறப்பினை
என்னவென்றுரைப்பேன்?
இன்னதென விளங்கா வேரினை எங்கு
சென்றுகாண்பேன்?
தந்தை வழிவோரோ – ஜப்பானும், ரஷ்யாவும் ஆகும்
பாட்டன் அவன் மணந்தான் ஐரிஷ் பெண்தன்னையே
தாய் வழிப்பாட்டன் நீயோ திராவிட இந்தியன் ஆவாய்
கருர் சுந்திரம் பிள்ளையின் அமெரிக்காவில் வேரூண்றிய இளய மகன்
தாய் அவளோ பெற்றதாயிக்கு ஜுயிஷ் பரம்பரையாம்
முப்பாட்டன் உன் முன்னாலே ஐரோப்பிய வெள்ளை துரையுமாவார்
இத்துணை நாடுகளின் சிறப்போடு மண்ணீல் உதித்தவளாம்
அவள் தன்னை கண்டறிய உள்ளம் உவகை கொள்ளுமே
இதனை அறிய என் அன்னை இன்று இல்லையே
உடன் பிறந்த நாங்கள் அறுவரும் உன்னுடன் என் குடும்பதுடன்
வாழ்துகிறோம்.
No comments:
Post a Comment