இச்சைக் கிளியே
பச்சைக் கிளியே பச்சைக்கிளியே
உன் சிறகை விரித்தே மனம் கவர்ந்தாய்
பச்சை மரத்தில் இச்சைக்கிளியே
சிவந்த மூக்குப் பச்சைக்கிளியே
மனத்துக்குகந்த கிளியே
கொத்தித்தின்னும் பழங்களையே
அழகாய்க் கொய்யக்கண்டேன் - அதனையே
கொத்தாய் தருவேன்
என்னிடம் வா நீ என்னிடம் வா!
கொய்யாப் பழத்தின் சுவைதனியே
அதை உண்டு மகிழும் அழகைக் கண்டேன் - இங்குக்
கொய்யாமல் விட்ட கனியும் உண்டு
அதனினும் இனிக்கும் உன் சொல்லும் உண்டு.
இச்சைபோல் திரியும் பச்சைக்கிளியே
இசைந்து இசைந்து நான் உனைப்பாட - என்
இச்சைக்க்ணங்கி நீ என்னிடம் வா -
என்னிடம் வா நீ என்னிடம் வா !
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாய்
நீ சொன்ன சொல் காதில் இனித்து நிற்க
நான் சொன்னதைக் கற்க
என்னிடம் வா நீ என்னிடம் வா!
பச்சைக் கிளியே பச்சைக்கிளியே
உன் சிறகை விரித்தே மனம் கவர்ந்தாய்
பச்சை மரத்தில் இச்சைக்கிளியே
சிவந்த மூக்குப் பச்சைக்கிளியே
மனத்துக்குகந்த கிளியே
கொத்தித்தின்னும் பழங்களையே
அழகாய்க் கொய்யக்கண்டேன் - அதனையே
கொத்தாய் தருவேன்
என்னிடம் வா நீ என்னிடம் வா!
கொய்யாப் பழத்தின் சுவைதனியே
அதை உண்டு மகிழும் அழகைக் கண்டேன் - இங்குக்
கொய்யாமல் விட்ட கனியும் உண்டு
அதனினும் இனிக்கும் உன் சொல்லும் உண்டு.
இச்சைபோல் திரியும் பச்சைக்கிளியே
இசைந்து இசைந்து நான் உனைப்பாட - என்
இச்சைக்க்ணங்கி நீ என்னிடம் வா -
என்னிடம் வா நீ என்னிடம் வா !
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாய்
நீ சொன்ன சொல் காதில் இனித்து நிற்க
நான் சொன்னதைக் கற்க
என்னிடம் வா நீ என்னிடம் வா!
No comments:
Post a Comment