கடற்கரை
ஜனசமுத்திரம் நீக்க நிஜமுத்திரம் நோக்கி
நடந்தன கால்கள்
ஆசைதீர அலைத்தேவனின் ஆர்ப்பாட்டத்தில்
லயித்தது நெஞ்சம்
சமுத்திரத் தேவனுக்குத்தான்
எத்துணை அலை மக்கள்?
ஆர்ப்பரித்து அவையும் தாம்
உரைப்பது
தொன்றுணர்ந்தேன்
மெய்ம்மறந்த நிலை விடுத்துத்
தன்னிலை அடந்தவளை
அருகே இளவட்டம் கஞ்சா அடிப்பதைக்
காண் எண்றாள் என்மகள்;
அந்தோ அதுவன்றே மானிடரே
யான் கடற்கரையில் காணவந்தெனச்
சற்று முன்னே செல்ல மேலைநாட்டிலும்
மிஞ்சி தெருவிற்கு வந்த காதல்
ரசா பாசம் கண்டு விரைந்து நடக்க
ஒரு நிறுத்தந்தனில் முதிய கிழவர் பேச்சுக் கூட்டம்
கடற்கரைக்கு அடைக்கலம் எத்துணைவகை என
மனமும் வியந்து போகுது.
ஜனசமுத்திரம் நீக்க நிஜமுத்திரம் நோக்கி
நடந்தன கால்கள்
ஆசைதீர அலைத்தேவனின் ஆர்ப்பாட்டத்தில்
லயித்தது நெஞ்சம்
சமுத்திரத் தேவனுக்குத்தான்
எத்துணை அலை மக்கள்?
ஆர்ப்பரித்து அவையும் தாம்
உரைப்பது
தொன்றுணர்ந்தேன்
மெய்ம்மறந்த நிலை விடுத்துத்
தன்னிலை அடந்தவளை
அருகே இளவட்டம் கஞ்சா அடிப்பதைக்
காண் எண்றாள் என்மகள்;
அந்தோ அதுவன்றே மானிடரே
யான் கடற்கரையில் காணவந்தெனச்
சற்று முன்னே செல்ல மேலைநாட்டிலும்
மிஞ்சி தெருவிற்கு வந்த காதல்
ரசா பாசம் கண்டு விரைந்து நடக்க
ஒரு நிறுத்தந்தனில் முதிய கிழவர் பேச்சுக் கூட்டம்
கடற்கரைக்கு அடைக்கலம் எத்துணைவகை என
மனமும் வியந்து போகுது.
No comments:
Post a Comment