இந்திரலோகம்
மலகா இன்று இந்திரலோகம்
மயக்கத்தில் நான் கூறவில்லை
மனிதர் தம் துணையுடனே
மலகாவில் உல்லாசம் பெற்றிடவே
மலகாவும் ஐரோப்பாவில்
மனங் கவரும் பூங்காவாம்
மனிதரும் கடலாட
மாந்தரெல்லாம் கடற்கரையில்
மகிழந்தே வெப்பம் பெற
மனம் மகிழ்ந்து வெயிலில்
மல்லாந்தே படுத்திருக்க
மற்றும்பலர் தோணியில் உலா வர
கப்பல் தனில் தனவான்கள்
காற்று வாங்கி உறங்கிய பின்
காலார மலகாவில் நடந்தே
கடைகண்ணி சென்றிடுவர்
கட்டிளங் காளையரும் பல நாட்டார்
கட்டியணைத்தே துணையுடன் நடமாடக்
காணும் பெண்ணினம் மேற்கத்தியர்
கண்ணுக்கு விருந்தாக பிக்குனியுடன்
கண்டவர் யாரும் காணாது செல்ல
கடைசிக் காலத்தே முதிய ஜோடி
காணக்கிடைக்காத காட்சிகளைக்
காணவிழைந்தே பவனிவந்தனரே;
கடைகளுக்கு அங்கே குறைவில்லை
கடைதோறும் வைரமணி
காலார நடப்போரும் பெண்டிரும்
கண்குளிரக் கண்ட பொருள் பல:
கடல் கொடுத்த முத்துச்சரம்
கலை கொடுத்த தோல் பொருள்;
துணியிலான உடையோடு
மணியிலான ஆபரணமும்
வணிகரிடம் வாங்கி வர
வாணிபமும் பெருகியதே
தெருவெல்லாம் மதுபானக்கடை
தெரு முழுதும் தங்கும் விடுதி
கடலெல்லாம் கப்பலாம்
கப்பல் வடிவில் மாளிகையும் உண்டாம்.
காண வந்து ஸ்பெயின் நாட்டு மலகாவைக்
காலனற்ற இந்திரலோகமாகக்
காட்டிய நிலை நினைவிலே
காலமெல்லாம் நிழலாடுதே.
மலகா இன்று இந்திரலோகம்
மயக்கத்தில் நான் கூறவில்லை
மனிதர் தம் துணையுடனே
மலகாவில் உல்லாசம் பெற்றிடவே
மலகாவும் ஐரோப்பாவில்
மனங் கவரும் பூங்காவாம்
மனிதரும் கடலாட
மாந்தரெல்லாம் கடற்கரையில்
மகிழந்தே வெப்பம் பெற
மனம் மகிழ்ந்து வெயிலில்
மல்லாந்தே படுத்திருக்க
மற்றும்பலர் தோணியில் உலா வர
கப்பல் தனில் தனவான்கள்
காற்று வாங்கி உறங்கிய பின்
காலார மலகாவில் நடந்தே
கடைகண்ணி சென்றிடுவர்
கட்டிளங் காளையரும் பல நாட்டார்
கட்டியணைத்தே துணையுடன் நடமாடக்
காணும் பெண்ணினம் மேற்கத்தியர்
கண்ணுக்கு விருந்தாக பிக்குனியுடன்
கண்டவர் யாரும் காணாது செல்ல
கடைசிக் காலத்தே முதிய ஜோடி
காணக்கிடைக்காத காட்சிகளைக்
காணவிழைந்தே பவனிவந்தனரே;
கடைகளுக்கு அங்கே குறைவில்லை
கடைதோறும் வைரமணி
காலார நடப்போரும் பெண்டிரும்
கண்குளிரக் கண்ட பொருள் பல:
கடல் கொடுத்த முத்துச்சரம்
கலை கொடுத்த தோல் பொருள்;
துணியிலான உடையோடு
மணியிலான ஆபரணமும்
வணிகரிடம் வாங்கி வர
வாணிபமும் பெருகியதே
தெருவெல்லாம் மதுபானக்கடை
தெரு முழுதும் தங்கும் விடுதி
கடலெல்லாம் கப்பலாம்
கப்பல் வடிவில் மாளிகையும் உண்டாம்.
காண வந்து ஸ்பெயின் நாட்டு மலகாவைக்
காலனற்ற இந்திரலோகமாகக்
காட்டிய நிலை நினைவிலே
காலமெல்லாம் நிழலாடுதே.
No comments:
Post a Comment