வெண்ணிலவே
வெண்ணிலவே தண்ணிலவே
வெள்ளித்தட்டே
விண்ணின்று மண் அதனைக்
குளீர வைத்தாய்;
மண்மீது மழலையர்
உன்னைக் கண்டே
மயக்கமுற்றுப் பிடிக்கவென
வேட்கை கொண்டனர்
மாதர்தம் மனம் ஈர்க்கும்
நீ ஆடவந்தானோ? அன்றி
மங்கையாய் மனம் கவரும்
மாதரசியோ,
உன் மீது கால்வைத்து
வெற்றி கண்டோர்
வெற்றி அடியினை
பதித்திட்டாரே,
உலகில் மண்மீது
உன்வடிவை
உணர்ந்திட்டாரே,
மதிமயக்கம் தரவல்ல
அற்புதக் கோளே, தினம்
முழு நிலவாய் வாராயோ என
மனமும் ஏங்குதே.
வெண்ணிலவே தண்ணிலவே
வெள்ளித்தட்டே
விண்ணின்று மண் அதனைக்
குளீர வைத்தாய்;
மண்மீது மழலையர்
உன்னைக் கண்டே
மயக்கமுற்றுப் பிடிக்கவென
வேட்கை கொண்டனர்
மாதர்தம் மனம் ஈர்க்கும்
நீ ஆடவந்தானோ? அன்றி
மங்கையாய் மனம் கவரும்
மாதரசியோ,
உன் மீது கால்வைத்து
வெற்றி கண்டோர்
வெற்றி அடியினை
பதித்திட்டாரே,
உலகில் மண்மீது
உன்வடிவை
உணர்ந்திட்டாரே,
மதிமயக்கம் தரவல்ல
அற்புதக் கோளே, தினம்
முழு நிலவாய் வாராயோ என
மனமும் ஏங்குதே.
No comments:
Post a Comment