அக்கினிக் குஞ்சு
அக்கினிக் குஞ்சொன்று உண்டு
ஆதவன் என்பதன் பேராம்,
ஆக்கச் சக்தி அனைத்தும் ஒன்றுகூடி
ஆன கோள்களின் நடுநாயகன்,
அண்டப்படைப்பில் அத்தனை உயிர்க்கும்
உறுதுனையாய் இருப்பவனே!
உணவை வளர்க்கும் வல்லவன்
உணவும் சமைப்பான் சூரிய அடுப்பாய்,
உண்டு இங்கே நீரை சூடாக்கும்
சூரிய தகட்டுக் கருவியும்
நஞ்சதைப் பரப்பினாய் மனிதனே
விண்வெளியில் அறியாமையாலே,
புகைக்கும் தொழிற்சாலையும்
உலகெங்கும் நிறைந்திருக்கு,
புகைவிடும் வாகனமும்
ஏராளம் அதனால்
நச்சுப்புகை தந்த படலமும்
உலகிற்குக் கூரையாக வெப்பத்தை
உள்ளடககக்
கிரின்ஹவுஸ் விளைவாம் இது
என உலகம் பேசுதே!
அறிவு ஜீவியே, மனிதனே
உலகை நீ காத்துவிடு, கடலில்
அமிழ்ந்து போகாமல் உலகை
நீ மீட்டுவிடு அக்கினிக் குஞ்சே,
பூமித்தாய்க்
கொதித்தே பொங்கிடுவாள் என்று நீ பதறினையோ
பூமிதனில் சுற்றுசூழலையும்
தூய்மையாக்க முனைந்திடுவோம்,
பூமி எங்கும் பயிர் பச்சை
நஞ்சை உறிஞ்சும் கரும்பு தன்னைப்
பயிரிடுவோம்,
பூமியிலே இங்கே பிரேசிலைப்போல் வாகனம்
ஓட்ட
எத்தனாலைத் தந்திடுவோம்,
பூமியையும் சந்த்தியையும் காத்திடுவோம்,
பனிமலையைப் புகைமண்டலம் உருக்காமல்
காத்திடுவோம்
பூமியையும் மக்களையும் காத்திடுவோம்
அக்கினிக் குஞ்சே கவலையை விடு!
No comments:
Post a Comment