நடப்பவை நலமே
பண்ணிய காரியம் யாவும் வாழ்வில் பல படிகளாம்
பண்போடு வாழக் கசப்பான அனுபவம் நம் காலில்
தைத்தவை பல முட்கள் என அகற்றிவிடு
கண்கொண்டு யாவையும் கண்டு கொண்டபின்னே
எண்ணத்தில் நிறுத்தியதைத் திருத்தியபின்னே
நடப்பவை யாவும் நலமே என்று அடி எடுத்திடவே
நடக்கப்போவதும் நன்மையே நல்மனமே நம்பு.
செயலிலும் தூய்மையைக் கலந்துவிட்ட
பின்னே துன்பமேது?
செப்புவதும் செவ்வனே உண்மையே உய்யவே
சென்ற இடமெல்லாம் உன் புகழ் ஓங்கவே
சென்ற பாதையை எண்ணி மனம் மகிழுமே.
நான்
நான் யார் என்றே
நான் என்னை வினவ
நான் ஓர் உயிர்
நான் ஓர் உருவம்
நான் ஒரு பெண்
நான் ஒரு மகள்
நான் ஒரு மனையாள்
நான் ஒரு தாய்
நான் ஒரு மூதாட்டி
நான் தன்னைவிட்டகல
நான் அங்கே உயர்ந்தேன்.
பண்ணிய காரியம் யாவும் வாழ்வில் பல படிகளாம்
பண்போடு வாழக் கசப்பான அனுபவம் நம் காலில்
தைத்தவை பல முட்கள் என அகற்றிவிடு
கண்கொண்டு யாவையும் கண்டு கொண்டபின்னே
எண்ணத்தில் நிறுத்தியதைத் திருத்தியபின்னே
நடப்பவை யாவும் நலமே என்று அடி எடுத்திடவே
நடக்கப்போவதும் நன்மையே நல்மனமே நம்பு.
செயலிலும் தூய்மையைக் கலந்துவிட்ட
பின்னே துன்பமேது?
செப்புவதும் செவ்வனே உண்மையே உய்யவே
சென்ற இடமெல்லாம் உன் புகழ் ஓங்கவே
சென்ற பாதையை எண்ணி மனம் மகிழுமே.
நான்
நான் யார் என்றே
நான் என்னை வினவ
நான் ஓர் உயிர்
நான் ஓர் உருவம்
நான் ஒரு பெண்
நான் ஒரு மகள்
நான் ஒரு மனையாள்
நான் ஒரு தாய்
நான் ஒரு மூதாட்டி
நான் தன்னைவிட்டகல
நான் அங்கே உயர்ந்தேன்.
No comments:
Post a Comment