கண்மணியே !
கண்மணியே கண்மணியே
காணவந்தாய் வையகத்தைக்
கண்மணியே இவ் உலகில்
வாழவந்தாய் பெண்மணியாய்
கண்முன்னே உயர்ந்தோராய்
வாழும்பல நரிகள் உண்டு
கண்கொண்டு பார்த்ததுண்டு
கயவர் வீசும் வலையினையும்
கண்டபின்பும் எதிர்த்திட்டே
வாழும்பல நிலையும் உண்டு
கண்மணியே இவ் உலகம்
கற்கள்நிறை பாதையம்மா
கண்ணுற்றே வீரமதை
நிறுத்து மனம் உரமாயின்
கண்கலங்கா மங்கையாக
வாழ வழி வகுத்துவிடு
கண்டிடுவாய் வென்றிடுவாய்
வாழ்வு என்றும் உன் வயமாகும்
கண்குளிரக் கண்டுவிடு
வாழ்வு என்றும் சுவையாகும்.
கண்மணியே கண்மணியே
காணவந்தாய் வையகத்தைக்
கண்மணியே இவ் உலகில்
வாழவந்தாய் பெண்மணியாய்
கண்முன்னே உயர்ந்தோராய்
வாழும்பல நரிகள் உண்டு
கண்கொண்டு பார்த்ததுண்டு
கயவர் வீசும் வலையினையும்
கண்டபின்பும் எதிர்த்திட்டே
வாழும்பல நிலையும் உண்டு
கண்மணியே இவ் உலகம்
கற்கள்நிறை பாதையம்மா
கண்ணுற்றே வீரமதை
நிறுத்து மனம் உரமாயின்
கண்கலங்கா மங்கையாக
வாழ வழி வகுத்துவிடு
கண்டிடுவாய் வென்றிடுவாய்
வாழ்வு என்றும் உன் வயமாகும்
கண்குளிரக் கண்டுவிடு
வாழ்வு என்றும் சுவையாகும்.
No comments:
Post a Comment