தனிச்சுகம்
வைகாசி வெயில் தாழ
வையத்தைக் குளிரவைக்க
வையத்தில் முழுநிலா வர
வைரத்திட்டாய் மேகம் வர
வைபோகமாய் வேப்பமரம் ஆட
சிலநேரம் வேளிக்காற்றில்
சிறகடித்துப் பறந்துவரச்
சின்ன மனம் விழைந்திடவே
சிறைபட்டு நாளெல்லாம்
சிந்தனைக்கு இடமின்றி
வெந்துபோகும் புழுக்கத்தில்
வெகு நேரம் இருந்திட்டே
வெளிவந்தேன் உலாவர
வெளிக்காற்றுச் சுகமாக
வெப்பந்தனைக் குறைத்ததே
தென்றலாய்த்தான் வீசியது
தெவிட்டும்மட்டும் நீர் அருந்தி
தென்னையின் நிழலிலே
தேகமெல்லாம் குளிர்ந்ததம்மா
தேமதுரத் தமிழ்க் கீதம் மிதந்து வந்ததே
சென்னையில் கடற்காற்று
செல்லுகின்ற பாதையில் வேப்பங்காற்று
செக்கச் சிவந்த செம்பருத்தியும்
செப்புவது ஒரு தூது
சொல்லாத சொல்லது
சொன்னால் புரியாதது
சொற்களுக்குள் அடங்காதது
சொற்ப காலம் அனுபவித்துவிடு
வசந்த ருது தருவது அது
வந்து ஆளை மயக்குவது
வருடி உம்மை வாழ்த்துவது
வசந்த காலத் தென்றலது.
வைகாசி வெயில் தாழ
வையத்தைக் குளிரவைக்க
வையத்தில் முழுநிலா வர
வைரத்திட்டாய் மேகம் வர
வைபோகமாய் வேப்பமரம் ஆட
சிலநேரம் வேளிக்காற்றில்
சிறகடித்துப் பறந்துவரச்
சின்ன மனம் விழைந்திடவே
சிறைபட்டு நாளெல்லாம்
சிந்தனைக்கு இடமின்றி
வெந்துபோகும் புழுக்கத்தில்
வெகு நேரம் இருந்திட்டே
வெளிவந்தேன் உலாவர
வெளிக்காற்றுச் சுகமாக
வெப்பந்தனைக் குறைத்ததே
தென்றலாய்த்தான் வீசியது
தெவிட்டும்மட்டும் நீர் அருந்தி
தென்னையின் நிழலிலே
தேகமெல்லாம் குளிர்ந்ததம்மா
தேமதுரத் தமிழ்க் கீதம் மிதந்து வந்ததே
சென்னையில் கடற்காற்று
செல்லுகின்ற பாதையில் வேப்பங்காற்று
செக்கச் சிவந்த செம்பருத்தியும்
செப்புவது ஒரு தூது
சொல்லாத சொல்லது
சொன்னால் புரியாதது
சொற்களுக்குள் அடங்காதது
சொற்ப காலம் அனுபவித்துவிடு
வசந்த ருது தருவது அது
வந்து ஆளை மயக்குவது
வருடி உம்மை வாழ்த்துவது
வசந்த காலத் தென்றலது.
No comments:
Post a Comment