தேவியின் மண்வாசனை
சின்ன ஊரில் தோன்றி உலகெங்கும் பரந்துள்ள
கருர் மக்களுக்கு வாழ்வை உணர்த்திட்ட
சித்தனான கரூர் தேவன் வாழ்ந்த கரூர் பூமியிலே
சின்னப் பெண்ணாய்ச் சுற்றி வந்த
பள்ளி நாள்கள் நிழலாட
பெண் பிறந்தால் ஒப்பாரி வைத்து
அழும் பெண்களிடையே
பெண்ணாகப் பிறத்தலே புண்ணியம் எனக் கருதி
புதுத்தெருவில் நாலவது படித்துப் பத்து வயதில்
புதிதாக முனிசிபல் பெரிய பள்ளி சென்ற போது
ஆறாவதை எட்டி ஐந்தாவதை விட்டு
அவசரமாய் ஆறாவதில் சேர்த்திட்டார் தேர்வு வைத்தே
பள்ளிக்குச்சென்று சுமையாகப்
புத்தகத்தைப் படித்தென்ன
பாராளவா போகிறாள் என பேசும் மக்களங்கே
பார்ப்பவரும் நினைப்பவரும் எந்தனுக்கு என் செய்வர்
என்றெண்ணி குமுதாவும் கமலாவும் தோழிகளாம்
கல்லூரியில் கால்வைக்க
பதினாலு வயதினிலே தனிஉரிமை பெற்றே ரயிலேரி
திருச்சியிலே விடுதி தங்கிப் படித்திட்டேன்
ஆசைப்பட்டு நெஞ்சு விடுதி செல்லும்போது
ஆளில்லாக் காட்டிற்கு அனுப்பிய
உயிர்போல ஆடிப்போயிற்று
ஆனாலும் கல்வி கற்க விளைந்த
விழைந்த நெஞ்சம் வென்றுவிட்டதே
ஆளானபின்னும் பொருளாதாரம் கற்றுப்
பட்டம் பெற்றதை எண்ணி
மனம் மகிழ்ந்து போகுது..

No comments:
Post a Comment