இனிய மகவு
நன் மக்களை பெற்றிடவே
நாளும் அன்னை தன்னலம் காத்து
நாளும் நல்லெண்ணமுமாய்
நல்ல பல இசை கேட்டே
நாளொரு மேனியும் பொழுதுமாய்
நன்கு பிள்ளை வளர நல்லுண வுண்டு
நற்பண்போடு வாழ்த்திடவே
நலம் காக்கவேண்டும் பூ உலகில்
நல்ல மகவை வயிற்றில் சுமந்து
நல்ல ஒரு நன்னாளில்
பெற்று விட்ட பெருமகிழ்வாய்
பெற்ற மகவைப் பேணிக்காத்துப்
பெற்றுவிட்ட செல்வமேபோல்
பெற்ற மகவைக் கண்மணிபோலே
பெற்ற மகவைப் பேணி வர - மக்கள்
பெறுவர் உயர் கல்விதனை;
பெற்றிடுவர் நற்குணமும் - அவர்
பெற்ற பின்பு உடல் நலமும்
பெற்ற குடி போற்றிடவே
பெற்ற நாடும் நலம்பெரும் இது உறுதி.
எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்பு குழந்தையிடம் ஏராளம்
எதிர்பார்த்தேன் அவன் கற்றறிய பலவாறு
எதிர்பார்த்தான் பலவாறு உன்னிடமே
எதிர்பார்த்தே ஏமாறும் உலகமிது
எதிர்பார்ப்பு இன்றேல் சுகமாகும்
எதிர்பார்த்துக் கிட்டாவிடில் சுமையாகும் !
நன் மக்களை பெற்றிடவே
நாளும் அன்னை தன்னலம் காத்து
நாளும் நல்லெண்ணமுமாய்
நல்ல பல இசை கேட்டே
நாளொரு மேனியும் பொழுதுமாய்
நன்கு பிள்ளை வளர நல்லுண வுண்டு
நற்பண்போடு வாழ்த்திடவே
நலம் காக்கவேண்டும் பூ உலகில்
நல்ல மகவை வயிற்றில் சுமந்து
நல்ல ஒரு நன்னாளில்
பெற்று விட்ட பெருமகிழ்வாய்
பெற்ற மகவைப் பேணிக்காத்துப்
பெற்றுவிட்ட செல்வமேபோல்
பெற்ற மகவைக் கண்மணிபோலே
பெற்ற மகவைப் பேணி வர - மக்கள்
பெறுவர் உயர் கல்விதனை;
பெற்றிடுவர் நற்குணமும் - அவர்
பெற்ற பின்பு உடல் நலமும்
பெற்ற குடி போற்றிடவே
பெற்ற நாடும் நலம்பெரும் இது உறுதி.
எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்பு குழந்தையிடம் ஏராளம்
எதிர்பார்த்தேன் அவன் கற்றறிய பலவாறு
எதிர்பார்த்தான் பலவாறு உன்னிடமே
எதிர்பார்த்தே ஏமாறும் உலகமிது
எதிர்பார்ப்பு இன்றேல் சுகமாகும்
எதிர்பார்த்துக் கிட்டாவிடில் சுமையாகும் !
No comments:
Post a Comment