குமரிப்பெண்
முக்கடலும் கூடி அங்கே
உன்வாசல் தனில் முத்தமிட்டு வந்து நிற்க
முக்காலும் உலகையாளும்
அப் பரமசிவன் வரவை நோக்கி
கன்னிக் குமரியாய் நீ கால் கடுக்க நின்றதேன்?
திக்குத் தெரியாமல் ஆழ்கடலில்
தவிக்கின்ற கப்பலுக்கு
உன் மாணிக்க மூக்குத்தி
வழிகாட்டும் என்றுணர்ந்து
கன்னியாய் தவமிருந்து
காலமெல்லாம் நின்ற உன்னைக்
கண்டு நிலைத்து விடவன்றோ
வள்ளுவரும் விவேகானந்தரும்
கோயில்கொண்டனர் உன் அருகே?
முக்கடலில் மூழ்கி எழுந்த கதிரவன்
வான் ஏறி உனைக்காண விழைய
கடலின் பின் அவன் மறையும்
அழகையும் கண்டு
மாந்தர் நாடிவந்தனர் குமரி உனைத்தேடி
முக்கடலும் கூடி அங்கே
உன்வாசல் தனில் முத்தமிட்டு வந்து நிற்க
முக்காலும் உலகையாளும்
அப் பரமசிவன் வரவை நோக்கி
கன்னிக் குமரியாய் நீ கால் கடுக்க நின்றதேன்?
திக்குத் தெரியாமல் ஆழ்கடலில்
தவிக்கின்ற கப்பலுக்கு
உன் மாணிக்க மூக்குத்தி
வழிகாட்டும் என்றுணர்ந்து
கன்னியாய் தவமிருந்து
காலமெல்லாம் நின்ற உன்னைக்
கண்டு நிலைத்து விடவன்றோ
வள்ளுவரும் விவேகானந்தரும்
கோயில்கொண்டனர் உன் அருகே?
முக்கடலில் மூழ்கி எழுந்த கதிரவன்
வான் ஏறி உனைக்காண விழைய
கடலின் பின் அவன் மறையும்
அழகையும் கண்டு
மாந்தர் நாடிவந்தனர் குமரி உனைத்தேடி
No comments:
Post a Comment