கல்வி
கல்விக் கடல் பெரிது
கற்றவர் கரை காணாது
காலமெலாம் கற்றிடுவீர்,
கலைமகள் நிலைபெற்றால்
கவலை ஏதும் இல்லையம்மா,
கற்ற கலைக்குக் குறைவேது!
கற்றவர்க்குக் குனிவேது!
கற்று வந்த பாடமெல்லாம்
கனவாகிப் போகாமல்
கருணையுடன் மற்றவர்க்கும்
கற்றுத்தரக் கல்வி பெருகிவிடும்,
கற்றவர்க்குச் சிறப்புண்டு
கண்டுவந்தேன் உலகமெங்கும்,
கலைமகள் பெருமையினைக்
கண்டிடுவீர் யாவருமே.
கல்விக் கடல் பெரிது
கற்றவர் கரை காணாது
காலமெலாம் கற்றிடுவீர்,
கலைமகள் நிலைபெற்றால்
கவலை ஏதும் இல்லையம்மா,
கற்ற கலைக்குக் குறைவேது!
கற்றவர்க்குக் குனிவேது!
கற்று வந்த பாடமெல்லாம்
கனவாகிப் போகாமல்
கருணையுடன் மற்றவர்க்கும்
கற்றுத்தரக் கல்வி பெருகிவிடும்,
கற்றவர்க்குச் சிறப்புண்டு
கண்டுவந்தேன் உலகமெங்கும்,
கலைமகள் பெருமையினைக்
கண்டிடுவீர் யாவருமே.
No comments:
Post a Comment