Saturday, February 9, 2013

நெஞ்சுக்கு நேர்


நெஞ்சுக்கு நேர்

நேர்மை இன்று எங்கு  போயிற்று?
நேர்மை யற்ற பேச்சு!
நேர்மை இல்லா மாந்தர்!
நேர்மை யற்ற ஊழியர்!
நேர்மை இன்றி அரசாட்சி!
நேர்மை யற்ற கல்வி!
நேர்மை எங்கு நிற்கும்?
நேர்மை வணிகத்தில் வேண்டும் !
நேர்மை நெஞ்சில் வேண்டும் !
நேர்மை வாழ வேண்டும்!

நேர்மையை சாகவிடுவோமோ?
என்னில் நேர்மை உண்டு
உன்னில் நேர்மை உண்டு
நம்மில் நேர்மை உண்டு
என்னும் கீதம் வேண்டும்
என்றும் சிரார் சிட்டாய் வாழவேன்டும்
என்றும் வையகம் தளைத்து ஒளிர வேண்டும்
என்றும் உறவு உண்மையாய் இருத்தல்வேண்டும்
என்றும் உள்ளம் உவகைகொள்ள வேண்டும்

தேவிஜகா

தாய்

               தாய்

தாய்மைக்கு ஓர் விளக்கம் என் தாய்
தாய்மைக்கு ஓர் உச்சம் என் தாய்
தாய்மை  என்றால் சுமப்பதும் ஊட்டுவதும்
                             மட்டும் அல்ல
தாய் நீ தான் என்னை வழி நடத்தி வாழவைத்தாய்
தாய் தந்த உருவமிது வளர்த்ததும் நீயே!
நீ சொல்லாமல் நான் கற்ற பாடங்கள் பல
நீ எனக்கு முன் உதாரணம் அடிப்படையில்
மண்ணில் செய்தால் அது மண் பாண்டம்
பொன்னில் செய்தால் அது பொன் பாண்டம்

கமலத்தம்மாவின் உதிரத்தாலும், மனத்தாலும்
              உருவாகியது இந்த தோற்றமும் குணநலமும்
இந்த மன உறுதியும் நேர்மையும் எத்தனை பேருக்குக் கிட்டும்?

தேவிஜகா

சந்ததி

        சந்ததி

ஆழ்கடலில் உதித்தமுத்துக்களே
                  ரோஹித், ரக்க்ஷித்
ஆபரணத்துக்குகந்த கற்களே காவியா, அனுஷா
நவரத்தின மாலையே அனிக்கா
நீங்கள் நாலும் கற்று நன்கு வாழ வேண்டும்
நாடும் உலகும் போற்ற வாழ வேண்டும்
நாட்டையும் வீட்டையும் உலகையும்
                    காக்க முன்வரவேண்டும்
தனிமுத்தாயும், விலையுயர் கற்களாயும்
நவரத்தினமாலையும் அணிந்து மகிழமட்டுமல்ல
உலகுக்கு உயர்வுதரும் ஆக்கம் தேடவேண்டும்!

தேவிஜகா




                          

வாழ்க்கை துணை

             வாழ்க்கை துணை

வாழ்கைத்துணை நலம் இருபாலருக்கும் ஒன்றே
வாழ்க்கை என்னும் படகில் துடுப்பை
                        இருவருமே போட
வாழ்வு இனிதாகும், சுகமாகும் என்றும்
அடிவாங்கும் மாதரசியும்இல்லத்தில் உண்டு
அடிதாங்கா  மனமுடைய கணவரும் உண்டு
இடிதாங்கும் பாறையான மனையாளும் உண்டு
ஈடில்லா குனவதியும், குணவானும் உண்டு
ஈட்டிவிட்டால் விட்டுகொடுக்கும்
                           மனம் வாழ்வில் இன்று
துணைதானே இவ்உலகில் நிலையாக வேண்டும்
துணை இருந்தால், சாய்ந்து கொள்ள தூண் போல வாழ்வில்
துணை நலம் காக்க இல்லறம் இனிதாகச் செல்லும்.

தேவிஜகா

MANA MARRAM

            மனமாற்றம்

மனமே நீ அமைதி கொள்
மனமே நீ நிறைவு கொள்
மனமே நீ மகிழ்ந்திரு
மனமே நீ பிறரைப் போற்று
மனமே நீ உற்சாகப்படு
மனமே நீ உற்சாகப்படுத்து
மனமே நீ தான் நான்.

தேவிஜகா

Thursday, February 7, 2013


சித்திரைப் பெண்


சித்திரை பூத்ததும் பூத்தது வேம்பு.
                          கசந்ததோ?
சித்திரை, மக்களுக்கு முன்நின்று மருந்தாகவன்றோ
                                    தந்திட்டாள்!
சித்திரை அவள்ததன்னை வசந்தமென வரவேற்க
சித்திரை பூமி எங்கும் பூத்து குலுங்கினாள்
சித்திரை பெண் தன் பூச்சிரிப்பு போதாது என
சித்திரை மாதம் முழுதும் கனிகளை தாங்கினாள்
தித்திக்கும் வாழையும் தேன்பலாவும்
                                 அறுஞ்சுவை மாங்கனியும்
தீந்தமிழ் அன்னையாம் தமிழகத்திற்கும் தந்திட்தாள்
திகட்டாதோ அச்சுவை எனில்
திகட்டாமல் இனிப்பாக நினைவில் நிற்கும்
                                  அடுத்த வசந்தம் வரை



தேவி ஜகா

உலகப்புதுமலர் ஒலிவியா
                   
சின்னஞ் சிறுவயதில் தம்பி நீ
சிரித்து தவழ்ந்து வந்தாய்
பின்னே மருத்துவராய் கைதூக்கி
பிறருக்கு உதவி செய்தாய்!

கண்களின் காந்தவீச்சில்  உன் மகள்
பிரேயனைக் கவர்ந்து விட்டாள்!
இன்றோ உலகப் பேரொளி பேத்தி
ஒலிவியா பிறந்து விட்டாள்

அன்றலர்ந்த மலரான குழந்தை சிறப்பினை
                         என்னவென்றுரைப்பேன்?
இன்னதென விளங்கா வேரினை எங்கு
                          சென்றுகாண்பேன்?

தந்தை வழிவோரோ  ஜப்பானும், ரஷ்யாவும் ஆகும்
பாட்டன் அவன் மணந்தான் ஐரிஷ் பெண்தன்னையே
தாய் வழிப்பாட்டன் நீயோ திராவிட இந்தியன் ஆவாய்
கருர் சுந்திரம் பிள்ளையின் அமெரிக்காவில் வேரூண்றிய இளய மகன்
தாய் அவளோ பெற்றதாயிக்கு ஜுயிஷ் பரம்பரையாம்
முப்பாட்டன் உன் முன்னாலே ஐரோப்பிய வெள்ளை துரையுமாவார்
இத்துணை நாடுகளின் சிறப்போடு மண்ணீல் உதித்தவளாம்
அவள் தன்னை கண்டறிய உள்ளம் உவகை கொள்ளுமே
இதனை அறிய என் அன்னை இன்று இல்லையே
உடன் பிறந்த நாங்கள் அறுவரும் உன்னுடன் என் குடும்பதுடன்
                            வாழ்துகிறோம்.