பூமித்தாய்
பூமியைத் தாய் என்றுரைத்தல் சரியே
பூமா தேவியே பொருமையாய் மாநிலத்தைத் தாங்க
பூமித்தாய் பச்சைத் தாவரங்களை வாரி வழங்க
பூமியே புகலிடமாய் பல உயிர்கள் வாழப்
பூமித்தாய் பெருந்தெய்வமென உயர்ந்து நின்றாள்.
கடல்
கடல்பெரிது கடல்பெரிது
என்றுரைக்கக் கேட்டதுண்டு!
கடல் அலைகள் கரைமீது வந்து மோதும்போது
கடலோரம் நின்று நாங்கள் கண்டு வியந்ததுண்டு;
கடல் ஓயும் கடல் ஓயும்
எனகாத்து நிற்பவரும் உண்டு;
அலை ஓய்ந்து கடலாட
நினைப்பவரைப் பார்க்க
அவர் வாழ்வில் எதிர் நீச்சல் தெரியாமல்
தவிக்கும் நிலை கண்டோம்
அலைகள் நம்மைப் பார்த்துச் சொல்லும்
சேதி ஒன்று உண்டு
அது அலை அலையாய்
வாழ்வில் பல நிகழ்ச்சிகளும்
இன்ப துன்பம் வந்துபோகும் என்பதாகும்.
வேலா
நீக்கமற நிறைந்திருக்கும்
நீலமயில் வேலா;
நேர்க்குமிழிக் குளந்தனிலே
நீ பிறந்தாய் தாமரையில்;
கார்த்திகைப் பெண் பெற்ற
பார்புகழும் வேந்தே;
பாலகனாய் வந்து என்னைக் காத்திடுவாய்
பார்வதி மைந்தனே உன்னை நான்
வணங்குகிறேன்.
பூமியைத் தாய் என்றுரைத்தல் சரியே
பூமா தேவியே பொருமையாய் மாநிலத்தைத் தாங்க
பூமித்தாய் பச்சைத் தாவரங்களை வாரி வழங்க
பூமியே புகலிடமாய் பல உயிர்கள் வாழப்
பூமித்தாய் பெருந்தெய்வமென உயர்ந்து நின்றாள்.
கடல்
கடல்பெரிது கடல்பெரிது
என்றுரைக்கக் கேட்டதுண்டு!
கடல் அலைகள் கரைமீது வந்து மோதும்போது
கடலோரம் நின்று நாங்கள் கண்டு வியந்ததுண்டு;
கடல் ஓயும் கடல் ஓயும்
எனகாத்து நிற்பவரும் உண்டு;
அலை ஓய்ந்து கடலாட
நினைப்பவரைப் பார்க்க
அவர் வாழ்வில் எதிர் நீச்சல் தெரியாமல்
தவிக்கும் நிலை கண்டோம்
அலைகள் நம்மைப் பார்த்துச் சொல்லும்
சேதி ஒன்று உண்டு
அது அலை அலையாய்
வாழ்வில் பல நிகழ்ச்சிகளும்
இன்ப துன்பம் வந்துபோகும் என்பதாகும்.
வேலா
நீக்கமற நிறைந்திருக்கும்
நீலமயில் வேலா;
நேர்க்குமிழிக் குளந்தனிலே
நீ பிறந்தாய் தாமரையில்;
கார்த்திகைப் பெண் பெற்ற
பார்புகழும் வேந்தே;
பாலகனாய் வந்து என்னைக் காத்திடுவாய்
பார்வதி மைந்தனே உன்னை நான்
வணங்குகிறேன்.
No comments:
Post a Comment