கனிமொழி
அருமருந்தினும் தனிச்சிறப்பு
இனிய சொல்லுக்கு உண்டு-என
ஆன்றோர் பலர் கூறியும்
எடுத்துரைக்தும் ஏற்க மறந்த
அன்பு நெஞ்சே நீ வாடுவதேன்?
எனக்கும் புரியவில்லை
முகமலர்ந்து புன்சிரிப்பாலே
நல்முத்தினும் இனிதாய்,
தேன் மொழியாலே நல்லது பகர்ந்திட
மருத்துவர் மருந்தின்றி மாயமாய்ப்
பறந்திடும் உன்நோய் காணீர்
அவர்தம் பேச்சுதந்த உறுதியினை நம்பி
இனிதாய் பேசிப்பேசி
மக்கள் மனதை அலைத்தே
இனிய வழியில் நாட்டை ஆளுபவர் பலர்
இனியசொல் வித்தை தந்த நல்ல
இனிய வாழ்வன்றோ காணீர்;
இன்சொல் பலவிருக்க
வள்ளுவன் கூறியது போல்
கனியிருக்க காய் கவரலாமோ?
மாந்தர்களே உலகம் உங்கள் வயப்படும்
கனிமொழியினைப் பின்பற்றிடிவீர்.
சக்கையின் சக்தி
சக்தி உலகை இயக்குவதால்
சக்தியின்றி வாழ்வில்லை
சக்தி பல வகையாதலால்
சக்தியினை பெற்றிடவே
சக்திதரும் மூலப்பொருளாம் பெட்ரோல் டீசல்
முடியும் காலம் நெருங்குவதால்
சக்தி தேடி பிரேசில் நாட்டைப்போல்
வாகனம் ஓட்ட பல மாற்றுவழி உண்டிங்கே
சக்தி கரும்புச் சக்கையிலும்
ஆலைக்கழிவிலிருந்தும் பெற்றுவிட மாற்று
சக்தி வழிகண்டறிய தக்க தருணம் இதுவெனச்
சக்தி எரிசக்தியாக்கக்
கரும்புப் பயிர்க் காற்றை தூய்மைக்கச்
சக்தி வழி கண்டிடுவோம்
கரும்புச்சக்கை பெரும்
சக்தி தரும் கண்டிடுவீர்.
அருமருந்தினும் தனிச்சிறப்பு
இனிய சொல்லுக்கு உண்டு-என
ஆன்றோர் பலர் கூறியும்
எடுத்துரைக்தும் ஏற்க மறந்த
அன்பு நெஞ்சே நீ வாடுவதேன்?
எனக்கும் புரியவில்லை
முகமலர்ந்து புன்சிரிப்பாலே
நல்முத்தினும் இனிதாய்,
தேன் மொழியாலே நல்லது பகர்ந்திட
மருத்துவர் மருந்தின்றி மாயமாய்ப்
பறந்திடும் உன்நோய் காணீர்
அவர்தம் பேச்சுதந்த உறுதியினை நம்பி
இனிதாய் பேசிப்பேசி
மக்கள் மனதை அலைத்தே
இனிய வழியில் நாட்டை ஆளுபவர் பலர்
இனியசொல் வித்தை தந்த நல்ல
இனிய வாழ்வன்றோ காணீர்;
இன்சொல் பலவிருக்க
வள்ளுவன் கூறியது போல்
கனியிருக்க காய் கவரலாமோ?
மாந்தர்களே உலகம் உங்கள் வயப்படும்
கனிமொழியினைப் பின்பற்றிடிவீர்.
சக்கையின் சக்தி
சக்தி உலகை இயக்குவதால்
சக்தியின்றி வாழ்வில்லை
சக்தி பல வகையாதலால்
சக்தியினை பெற்றிடவே
சக்திதரும் மூலப்பொருளாம் பெட்ரோல் டீசல்
முடியும் காலம் நெருங்குவதால்
சக்தி தேடி பிரேசில் நாட்டைப்போல்
வாகனம் ஓட்ட பல மாற்றுவழி உண்டிங்கே
சக்தி கரும்புச் சக்கையிலும்
ஆலைக்கழிவிலிருந்தும் பெற்றுவிட மாற்று
சக்தி வழிகண்டறிய தக்க தருணம் இதுவெனச்
சக்தி எரிசக்தியாக்கக்
கரும்புப் பயிர்க் காற்றை தூய்மைக்கச்
சக்தி வழி கண்டிடுவோம்
கரும்புச்சக்கை பெரும்
சக்தி தரும் கண்டிடுவீர்.
No comments:
Post a Comment