குயில்
கூவும் குயில் நாதம்
கூவக் கேட்டுக் கண்மலரக்
கூவாத நாளும் ஒரு நாளா?
கூவும் குயிலின் ஓசை
கூவி அழைக்கக் காலை விடியும்
கூப்பிட்ட அன்னையை நோக்கி,
கூவி அழைக்கும் குழந்தையுமே!
“கூக்கூ” வெனக் குயிலின்
கூவியக் குரல் காதில் தேனிசைக்கும்.
வானம்
உயர்ந்து நின்றது வானம்; அதை
எட்டிப் பிடிக்க முடியுமா?
உயர்ந்த மனிதனையும்,
உயர்ந்த கோபுரத்தையும்
உயர்ந்த கட்டடம் அனைத்தையும்
வானுக்கு ஒப்பிட்டு கூறுவதால்
உயர உயரப் பறந்தாலும்,
ஊர்குருவி
பருந்தாகாது எனவே
உண்மை உயர்வால்
வானுயர புகழ்பட வாழ்வோம்
உயர்வு உள்ளத்தில் வேண்டுவது
உயர்ந்து வாழ்வாங்கு வாழ்வு வாழ மானுடர்
வானவராக வாழும் வழியுமுண்டு
வானுக்கும் பூமிக்கும் இடைவெளி பெரிதாயினும்
வானின்று பெய்த மழை பூமியை நனைத்துவிடும்
விண்ணுக்கும் மண்ணுக்குமாய் வான ஊர்திகொண்டு
வானை வென்றுவிட்ட மானுடர் வானுறையும்
தெய்வத்திடம் வாழ,
வாழ்வாங்கு வாழ வழி வகுப்போம்.
கூவும் குயில் நாதம்
கூவக் கேட்டுக் கண்மலரக்
கூவாத நாளும் ஒரு நாளா?
கூவும் குயிலின் ஓசை
கூவி அழைக்கக் காலை விடியும்
கூப்பிட்ட அன்னையை நோக்கி,
கூவி அழைக்கும் குழந்தையுமே!
“கூக்கூ” வெனக் குயிலின்
கூவியக் குரல் காதில் தேனிசைக்கும்.
வானம்
உயர்ந்து நின்றது வானம்; அதை
எட்டிப் பிடிக்க முடியுமா?
உயர்ந்த மனிதனையும்,
உயர்ந்த கோபுரத்தையும்
உயர்ந்த கட்டடம் அனைத்தையும்
வானுக்கு ஒப்பிட்டு கூறுவதால்
உயர உயரப் பறந்தாலும்,
ஊர்குருவி
பருந்தாகாது எனவே
உண்மை உயர்வால்
வானுயர புகழ்பட வாழ்வோம்
உயர்வு உள்ளத்தில் வேண்டுவது
உயர்ந்து வாழ்வாங்கு வாழ்வு வாழ மானுடர்
வானவராக வாழும் வழியுமுண்டு
வானுக்கும் பூமிக்கும் இடைவெளி பெரிதாயினும்
வானின்று பெய்த மழை பூமியை நனைத்துவிடும்
விண்ணுக்கும் மண்ணுக்குமாய் வான ஊர்திகொண்டு
வானை வென்றுவிட்ட மானுடர் வானுறையும்
தெய்வத்திடம் வாழ,
வாழ்வாங்கு வாழ வழி வகுப்போம்.
No comments:
Post a Comment