நடப்பவையாவையும் நலமே
பண்ணிய காரியம் யாவையும் பல படிகளாம்
பண்பொடு வாழ நம் காலில்
தைத்தவை பல முட்களே என
எண்ணியவை யாவையும் நன்மையே நன்மையே
கண்கொண்டு கண்டுகொண்டபின்னே
எண்ணத்தில் நிறுத்தியதைத் திருத்திய பின்னே
நடப்பவை யாவையும் நலமே
என்று அடி எடுத்திடவே
செயலிலும் தூய்மையைக்
கலந்து விட்டபின்னே துன்பமேது?
செப்புவதும் செவ்வனே உண்மையே உய்யவே
சென்ன்ற பாதையை எண்ணிமனம் மகிழுமே
அடவிமகள்
நடக்காத ஜீவன்களே
நாநிலம் காக்கும் அடவிகளே
நாடெங்கும் திரியாமல்
நாநிலத்தைக் காத்து நின்றே
மண் மீது பச்சைப் பாய் விரித்தாயே
மண் மகளின் பச்சைப் போர்வைகளாய்ச்
செடி கொடியாய் மலர்கொத்தை ஈன்று
செல்லுமிடவெல்லாம் விதை தூவினாய்
மனிதரவர் மாசுபடுத்திய காற்றதனை
மாற்றிவிட்டாய்.
அவர் தந்த அசுத்த புகைமண்டலத்தை
மாற்றும் வித்தையை கற்றுத்தா நீ
கரும்புப் பயிரை கொண்டு நாங்கள்
காற்றைத் தூய்மை செய்ய விழையும்
காலமிதுவாகும் என உலக மக்கள் உணரக்
கால மெல்லாம் பூ உலகைக்
காக்க வந்த பசுமைப் பயிரே
கார்காலத்தே மழை பெய்ய உதவிய
அடவி மகளே வாழி நீ.
பண்ணிய காரியம் யாவையும் பல படிகளாம்
பண்பொடு வாழ நம் காலில்
தைத்தவை பல முட்களே என
எண்ணியவை யாவையும் நன்மையே நன்மையே
கண்கொண்டு கண்டுகொண்டபின்னே
எண்ணத்தில் நிறுத்தியதைத் திருத்திய பின்னே
நடப்பவை யாவையும் நலமே
என்று அடி எடுத்திடவே
செயலிலும் தூய்மையைக்
கலந்து விட்டபின்னே துன்பமேது?
செப்புவதும் செவ்வனே உண்மையே உய்யவே
சென்ன்ற பாதையை எண்ணிமனம் மகிழுமே
அடவிமகள்
நடக்காத ஜீவன்களே
நாநிலம் காக்கும் அடவிகளே
நாடெங்கும் திரியாமல்
நாநிலத்தைக் காத்து நின்றே
மண் மீது பச்சைப் பாய் விரித்தாயே
மண் மகளின் பச்சைப் போர்வைகளாய்ச்
செடி கொடியாய் மலர்கொத்தை ஈன்று
செல்லுமிடவெல்லாம் விதை தூவினாய்
மனிதரவர் மாசுபடுத்திய காற்றதனை
மாற்றிவிட்டாய்.
அவர் தந்த அசுத்த புகைமண்டலத்தை
மாற்றும் வித்தையை கற்றுத்தா நீ
கரும்புப் பயிரை கொண்டு நாங்கள்
காற்றைத் தூய்மை செய்ய விழையும்
காலமிதுவாகும் என உலக மக்கள் உணரக்
கால மெல்லாம் பூ உலகைக்
காக்க வந்த பசுமைப் பயிரே
கார்காலத்தே மழை பெய்ய உதவிய
அடவி மகளே வாழி நீ.
No comments:
Post a Comment