தாவரமே !
தானாகக் கற்ற தாவரமே
இந்த மானுடர்க்கும் கொஞ்சம் எடுத்துக்கூறு!
தான் பெற்றது கரியமில வாயு எனினும்
நீ தந்தது பிராண வாயுதானே?
பிராணன் தந்த தாவர உயிரே
உன் பசுமை -
கண்ணையும் கவருதே!
உயிர் கொடுத்த பெற்றவரிடமே,
பெற்றவை மறக்கும்
மனித சமுதாயமிது!
உன்னால் முடிந்தால்
அறிவுரை பகர்ந்திடு அவர்க்கு!
அமைதிப்பூங்கா
அமைதி பூங்கா ஒன்று வேண்டும்,
அலைபாயும் மக்களினின்று அகல;
அங்கு ஓயாத மோட்டார் வாகனமும்
ஓயாத மக்கள் கூக்குரலும்,
மதியாத பெருமக்கள் போட்டியும்
எட்டாத ஓரிடம் வேண்டும்;
திகட்டிய அறிவியல் உலகினின்று
இயற்கையோடு ஒட்டிய வாழ்வொன்று வேண்டும்;
வானமும், பூமியும், காடும், பறவையும்,
சூரியனும்,சந்திரனும், அருவியும், கடலுமே
இயற்கையாம் சூழலிது என மனம் லயித்திடவே,
இயற்கை எய்திட முன்னோர் விரும்பியே
ஓய்ந்த காலத்தே மூச்சடக்க வேண்டியே
மூச்சடக்கக் கானகத்தே சென்றனரே,
பந்தமும் பாசமும் விட்டு விலகியே
அமைதியாக இன்று முதியோர் இல்லத்தே
அமைதிப்பூங்கா காணப் புறப்பட்டனரே!
தானாகக் கற்ற தாவரமே
இந்த மானுடர்க்கும் கொஞ்சம் எடுத்துக்கூறு!
தான் பெற்றது கரியமில வாயு எனினும்
நீ தந்தது பிராண வாயுதானே?
பிராணன் தந்த தாவர உயிரே
உன் பசுமை -
கண்ணையும் கவருதே!
உயிர் கொடுத்த பெற்றவரிடமே,
பெற்றவை மறக்கும்
மனித சமுதாயமிது!
உன்னால் முடிந்தால்
அறிவுரை பகர்ந்திடு அவர்க்கு!
அமைதிப்பூங்கா
அமைதி பூங்கா ஒன்று வேண்டும்,
அலைபாயும் மக்களினின்று அகல;
அங்கு ஓயாத மோட்டார் வாகனமும்
ஓயாத மக்கள் கூக்குரலும்,
மதியாத பெருமக்கள் போட்டியும்
எட்டாத ஓரிடம் வேண்டும்;
திகட்டிய அறிவியல் உலகினின்று
இயற்கையோடு ஒட்டிய வாழ்வொன்று வேண்டும்;
வானமும், பூமியும், காடும், பறவையும்,
சூரியனும்,சந்திரனும், அருவியும், கடலுமே
இயற்கையாம் சூழலிது என மனம் லயித்திடவே,
இயற்கை எய்திட முன்னோர் விரும்பியே
ஓய்ந்த காலத்தே மூச்சடக்க வேண்டியே
மூச்சடக்கக் கானகத்தே சென்றனரே,
பந்தமும் பாசமும் விட்டு விலகியே
அமைதியாக இன்று முதியோர் இல்லத்தே
அமைதிப்பூங்கா காணப் புறப்பட்டனரே!
No comments:
Post a Comment