அன்னையே
அன்னையே முதலாய்
அமுதமே உணவாய்
அல்லும் பகலுமே உழைத்திட்டாய்
அளவிலாப் பாசத்தால்
அச்சமின்றிப் பவனிவர
அகிலத்திலே தலைநிமிர்ந்து
ஆக்கத்துடன் உழைத்திடவே
ஆர்வத்துடன் படைத்திட்டாய்
ஆண்டுகள் பல சென்றுவிட
ஆளாக்கி அனுப்பிவைத்தாய்
அயராது உழைத்த உனை
அம்பிகை என்றுரைத்து
அனுதினமும் நினைத்திருப்பேன்
அகிலத்தில் உள்ளவரை.
கண்மணியே
கண்மணியே கண்மணியே
காணவந்தாய் வையகத்தை
கண்மணியே இவ்வுலகில்
வாழவன்தாய் பெண்மணியாய்
கண்முன்னே உயர்ந்தோராய்
வாழும்பல நரிகள் உண்டு
கண்கொண்டு பார்த்ததுண்டு
கயவர் வீசும் வலையினையும்
கண்டபின்பும் எதிர்த்திட்டே
வாழும் பல நிலையும் உண்டு
கண்மணியே இவ்வுலகம்
கற்கள் நிறை பாதையம்மா
கண்ணுற்றே வீரமதை நிறுத்து
மனம் உரமாயின்
கண்கலங்கா மங்கையாக
வாழவழி வகுத்துவிடு
கண்டிடுவாய் வென்றிடுவாய்
வாழ்வு உன் வயமாகும்.
அன்னையே முதலாய்
அமுதமே உணவாய்
அல்லும் பகலுமே உழைத்திட்டாய்
அளவிலாப் பாசத்தால்
அச்சமின்றிப் பவனிவர
அகிலத்திலே தலைநிமிர்ந்து
ஆக்கத்துடன் உழைத்திடவே
ஆர்வத்துடன் படைத்திட்டாய்
ஆண்டுகள் பல சென்றுவிட
ஆளாக்கி அனுப்பிவைத்தாய்
அயராது உழைத்த உனை
அம்பிகை என்றுரைத்து
அனுதினமும் நினைத்திருப்பேன்
அகிலத்தில் உள்ளவரை.
கண்மணியே
கண்மணியே கண்மணியே
காணவந்தாய் வையகத்தை
கண்மணியே இவ்வுலகில்
வாழவன்தாய் பெண்மணியாய்
கண்முன்னே உயர்ந்தோராய்
வாழும்பல நரிகள் உண்டு
கண்கொண்டு பார்த்ததுண்டு
கயவர் வீசும் வலையினையும்
கண்டபின்பும் எதிர்த்திட்டே
வாழும் பல நிலையும் உண்டு
கண்மணியே இவ்வுலகம்
கற்கள் நிறை பாதையம்மா
கண்ணுற்றே வீரமதை நிறுத்து
மனம் உரமாயின்
கண்கலங்கா மங்கையாக
வாழவழி வகுத்துவிடு
கண்டிடுவாய் வென்றிடுவாய்
வாழ்வு உன் வயமாகும்.
No comments:
Post a Comment