துணிவே துணை
கற்றவரும் மற்றவரும்
பாரளும் வேந்தரும் வித்தகரும்
செல்வச்சீமானும் பெற்றபின்பே துணிவதனை
வையத்தில் சிறந்திடுவர்.
துணிவே துணையாகும்
சான்றோர் கூறிடுவர்
துணிவின்றேல் விறையமாகும்
தாம் பெற்ற யாவுமே
சொர்க்கத்தைக் கண்டேன்
பளிங்கு மாளிகைக் கண்ணாடி
பன்னாட்டுத் தளமாகப்
பன்னாட்டு விமானம்
பளபளக்கும் ஹாங்காங்கில்
பலரும் மதிமயங்க
பறந்து வந்து இறங்க
வறுமையை காணவில்லை;
வறியவர் கூட்டமில்லை;
வருவோர் பார்த்து வியக்கும்
வான்முட்டும் கட்டிடங்கள்;
மாந்தர் அனைவருமே
மாறாது உழைப்பதனால்,
மாறாத செல்வமங்கே
மதியுள்ளோர் மயங்கிடவே!
விரைவு இரயில் உண்டு
விதமான தொலைக்காட்சியதில்
விரைந்தே பாதாளம் செல்லும்
விரைந்து செல்லும் இழுபாதை
விரைதிடலாம் பின் அடுக்குத்தளம்மேலே!
உழைப்பிற்கு முதலிடம்
உடைக்கு மற்ற இடம்
உண்டு எவர்க்கும் பல காலணிகள்!
இவ்வளவும் இருப்பதால்
இவ்விடம் சொர்க்கமாகும்!
இதுவே ஹாங்காங் காகும்
இங்கே வந்து காணீரோ?
கடல் சூழ்ந்த நாடு இது
கப்பலிலும் சுற்றிடலாம்
கிழக்குப் பகுதி நாடு இது
கீர்த்தியுடன் விளங்கிடுது
நேர்த்தியாகச் சீனருமே
நேசமாக வாழுமிடம்
நேசநாடு ஹாங்காங்கை
நேரிலே கண்டிடவே
நேரமது வந்துவிட்டால்
நேராகச் சென்றிடிவீர்.
கற்றவரும் மற்றவரும்
பாரளும் வேந்தரும் வித்தகரும்
செல்வச்சீமானும் பெற்றபின்பே துணிவதனை
வையத்தில் சிறந்திடுவர்.
துணிவே துணையாகும்
சான்றோர் கூறிடுவர்
துணிவின்றேல் விறையமாகும்
தாம் பெற்ற யாவுமே
சொர்க்கத்தைக் கண்டேன்
பளிங்கு மாளிகைக் கண்ணாடி
பன்னாட்டுத் தளமாகப்
பன்னாட்டு விமானம்
பளபளக்கும் ஹாங்காங்கில்
பலரும் மதிமயங்க
பறந்து வந்து இறங்க
வறுமையை காணவில்லை;
வறியவர் கூட்டமில்லை;
வருவோர் பார்த்து வியக்கும்
வான்முட்டும் கட்டிடங்கள்;
மாந்தர் அனைவருமே
மாறாது உழைப்பதனால்,
மாறாத செல்வமங்கே
மதியுள்ளோர் மயங்கிடவே!
விரைவு இரயில் உண்டு
விதமான தொலைக்காட்சியதில்
விரைந்தே பாதாளம் செல்லும்
விரைந்து செல்லும் இழுபாதை
விரைதிடலாம் பின் அடுக்குத்தளம்மேலே!
உழைப்பிற்கு முதலிடம்
உடைக்கு மற்ற இடம்
உண்டு எவர்க்கும் பல காலணிகள்!
இவ்வளவும் இருப்பதால்
இவ்விடம் சொர்க்கமாகும்!
இதுவே ஹாங்காங் காகும்
இங்கே வந்து காணீரோ?
கடல் சூழ்ந்த நாடு இது
கப்பலிலும் சுற்றிடலாம்
கிழக்குப் பகுதி நாடு இது
கீர்த்தியுடன் விளங்கிடுது
நேர்த்தியாகச் சீனருமே
நேசமாக வாழுமிடம்
நேசநாடு ஹாங்காங்கை
நேரிலே கண்டிடவே
நேரமது வந்துவிட்டால்
நேராகச் சென்றிடிவீர்.
No comments:
Post a Comment