கடல் மகள்
கடல் மகளே
அலை மகளே
நில மகளை
நோக்கி வந்தாயே;
நீல வானம்
அலைமகளை
நோக்கி வந்ததே;
காலைக் கதிரவன்
கடலினின்று உதிக்க
கடல் பொன்னாக மின்ன;
கரை நோக்கிக்
கடிது வந்து- என்
கால்களை நனைத்ததே,
நீல வானம்
கடல்தனைத் தொட்டு நின்றது ஏன்?
கடல் செல்வத்தைக்
களவாடவா?- அன்றி
அலைமகளை முத்தமிடவா?
அலைமகள் நிலம் தொட்டதேன்?
நில மகளுக்கு உப்பு போடவா?
கடல் நீரைச் சூரியன் சுட்டதேன்?
கடல் நீரை மழையாக்கவா?
கடல், நிலத்தை சூழ்ந்து கொண்டதேன்?
கடல் கடந்து நாம் உலகைக் காணவா?
கடல் மகளே
அலை மகளே
நில மகளை
நோக்கி வந்தாயே;
நீல வானம்
அலைமகளை
நோக்கி வந்ததே;
காலைக் கதிரவன்
கடலினின்று உதிக்க
கடல் பொன்னாக மின்ன;
கரை நோக்கிக்
கடிது வந்து- என்
கால்களை நனைத்ததே,
நீல வானம்
கடல்தனைத் தொட்டு நின்றது ஏன்?
கடல் செல்வத்தைக்
களவாடவா?- அன்றி
அலைமகளை முத்தமிடவா?
அலைமகள் நிலம் தொட்டதேன்?
நில மகளுக்கு உப்பு போடவா?
கடல் நீரைச் சூரியன் சுட்டதேன்?
கடல் நீரை மழையாக்கவா?
கடல், நிலத்தை சூழ்ந்து கொண்டதேன்?
கடல் கடந்து நாம் உலகைக் காணவா?
No comments:
Post a Comment