அவனியில் பெரிது எது?
அவனியில் உயர்ந்ததெது
அணுவின் ஆற்றலா?
அவனியில் சிறந்ததெது
அறிவியல் மாற்றமா?
அறிவுதான் சிறந்ததெனில்
அறிவிற்கு எட்டாத சக்தியை
அறிவுள்ளோர் ஏற்பதுண்டே
அதை அறிவீர் மானுடரே
ஆறறிவு பெற்றவரும்
ஆண்டுமாண்ட பெரியவரும்
அனுபவித்து உரைத்திட்டார்
ஆளும் தெய்வச் சக்தியினை
அறிவாற்றல் பெற்ற சிலர்
அறிவார்த்தமாகப் பல
அறிந்த உண்மைகூற
அதையும் நாம் ஏற்போமே.
பரந்த அமெரிக்கா
பரந்த விரிந்த அமெரிக்காவில்
பாதைகள் அகலமே
அங்கு நீண்டுத் தொடரும் ஹைவேஸ்
பாதைகளின் நீளமும் அதிகமே
பரந்த பூமி அடைக்கலம் தந்ததால்
பிறனாட்டவர் வாழ வழிதேடத்
தகுதிக்குத் தக்க ஊதியம்
ஆள் உடைபார்த்தன்றி மக்கள் தரம் பார்க்கும் பண்பும்
உழைப்பிற்கும் முதலிடம்
திறமைக்கு பலவழி என
உலகை உலகமக்களை நவீன கணினி யுகத்தை
உயர்த்தும் அமெரிக்க நாகரீகம் போற்றுவோம்.
அவனியில் உயர்ந்ததெது
அணுவின் ஆற்றலா?
அவனியில் சிறந்ததெது
அறிவியல் மாற்றமா?
அறிவுதான் சிறந்ததெனில்
அறிவிற்கு எட்டாத சக்தியை
அறிவுள்ளோர் ஏற்பதுண்டே
அதை அறிவீர் மானுடரே
ஆறறிவு பெற்றவரும்
ஆண்டுமாண்ட பெரியவரும்
அனுபவித்து உரைத்திட்டார்
ஆளும் தெய்வச் சக்தியினை
அறிவாற்றல் பெற்ற சிலர்
அறிவார்த்தமாகப் பல
அறிந்த உண்மைகூற
அதையும் நாம் ஏற்போமே.
பரந்த அமெரிக்கா
பரந்த விரிந்த அமெரிக்காவில்
பாதைகள் அகலமே
அங்கு நீண்டுத் தொடரும் ஹைவேஸ்
பாதைகளின் நீளமும் அதிகமே
பரந்த பூமி அடைக்கலம் தந்ததால்
பிறனாட்டவர் வாழ வழிதேடத்
தகுதிக்குத் தக்க ஊதியம்
ஆள் உடைபார்த்தன்றி மக்கள் தரம் பார்க்கும் பண்பும்
உழைப்பிற்கும் முதலிடம்
திறமைக்கு பலவழி என
உலகை உலகமக்களை நவீன கணினி யுகத்தை
உயர்த்தும் அமெரிக்க நாகரீகம் போற்றுவோம்.
No comments:
Post a Comment