கோசலராமா
அன்று ஆதவன் தன் பொற் கிரணங்களை
அள்ளிப் பூமியை ஒளிமயமாக்க,
ஒளிமயமான காலையில் சென்னையில் விழித்தெழுந்து
வாசலில் இரண்டு வாண்டுகள் அற்புதமாய்
அனுமன் வேடம் தாங்கியே ஆடிப்பாடி நின்றனர்;
அனுமன் வேடம் இட்டவர் காசு பெற்றதும்
அவ்விடம் விட்டுச் செல்லாது துணிகேட்டு நின்றனர்;
“ராமா! கோசல ராமா” என்றவன் -
துணி கேட்டான் தன் தாய்க்கு
“ராம, ராம லக்குவா” என்றாடியவன்
துணிகேட்டான் தன் தம்பிகளுக்கு.
பைரவன்
நாய்கள் பல கோடையில்
நான்கு தெருவிலும் திரிந்தன-பிடிக்க
நால்வர் வந்து தேடியும் உயிர் தப்பிச் சென்றன;
நாலபுறமும் சுற்றியும் ஓடிச்சென்று மறைந்தன,
நட்ட நடு நிசியிலும்
நான்கு நாய்கள் குரைக்கவே,
நன்கு தூங்கும் மக்களும்,
நாயின் குணம் வேட்டையே என
நானும் அவற்றின் குரைப்பைக் - கேட்டே
நாயும் துனையைத் தேடுதே என
நாலாவிதமாய் நினைத்திருந்தேன்
நானும் கண்டதொரு காட்சியது;
நாய்களும், பூனையைக் கொன்றன;
நாய்களின் பசியும் தணிந்தது;
பூனையின்
குருதியை குடித்தபின்
நாயின் பசிதனை அறிந்ததும்
நானும் அங்கு உணர்ந்தது
நாயும் ஓருயிர் மண்ணிலே; பசி தணிந்து
நாளும் உயிர் வாழவே அவ்வுயிர்
நாயாய் அலைந்த காட்சியும்
நாளும் விரியுதே என் கண்முன்னே!
அன்று ஆதவன் தன் பொற் கிரணங்களை
அள்ளிப் பூமியை ஒளிமயமாக்க,
ஒளிமயமான காலையில் சென்னையில் விழித்தெழுந்து
வாசலில் இரண்டு வாண்டுகள் அற்புதமாய்
அனுமன் வேடம் தாங்கியே ஆடிப்பாடி நின்றனர்;
அனுமன் வேடம் இட்டவர் காசு பெற்றதும்
அவ்விடம் விட்டுச் செல்லாது துணிகேட்டு நின்றனர்;
“ராமா! கோசல ராமா” என்றவன் -
துணி கேட்டான் தன் தாய்க்கு
“ராம, ராம லக்குவா” என்றாடியவன்
துணிகேட்டான் தன் தம்பிகளுக்கு.
பைரவன்
நாய்கள் பல கோடையில்
நான்கு தெருவிலும் திரிந்தன-பிடிக்க
நால்வர் வந்து தேடியும் உயிர் தப்பிச் சென்றன;
நாலபுறமும் சுற்றியும் ஓடிச்சென்று மறைந்தன,
நட்ட நடு நிசியிலும்
நான்கு நாய்கள் குரைக்கவே,
நன்கு தூங்கும் மக்களும்,
நாயின் குணம் வேட்டையே என
நானும் அவற்றின் குரைப்பைக் - கேட்டே
நாயும் துனையைத் தேடுதே என
நாலாவிதமாய் நினைத்திருந்தேன்
நானும் கண்டதொரு காட்சியது;
நாய்களும், பூனையைக் கொன்றன;
நாய்களின் பசியும் தணிந்தது;
பூனையின்
குருதியை குடித்தபின்
நாயின் பசிதனை அறிந்ததும்
நானும் அங்கு உணர்ந்தது
நாயும் ஓருயிர் மண்ணிலே; பசி தணிந்து
நாளும் உயிர் வாழவே அவ்வுயிர்
நாயாய் அலைந்த காட்சியும்
நாளும் விரியுதே என் கண்முன்னே!
No comments:
Post a Comment