நதி சொன்ன சேதி
பாதை அங்கே போகிறது மலையை நோக்கி
பாதை செல்லுமிடமங்கே ஜென்னர் என்பர்
பாதை இருபுறமும் நிற்பதங்க்கே ஓங்கிவளர்ந்த மரங்கள் பல
பாதை முடிவில் தெரிகிறது கிசேல்கிரேக் எனும் இருதள
மாளிகை
மாளிகையின் மேல்தளத்தை சென்றடைந்தோம்
மாளிகை மேலிருந்து வந்தவழி தெரிகுதய்யா
பாம்புபோல
மாளிகை முன்னாலே ரஷ்ய நதி; அதனுடன்
கலக்குதைய்யா அட்லான்டிக்கடல்
மாளிகையில் வந்ததங்கே சூரிய ஒளி ச்ன்னல் வழியே
நதி அங்கு ஓடுவது அமைதியாக; கடலும் அதனை
அணைப்பதும் அமைதியாக!
நதி வழி நெடுக ஆடி, ஓடி, பாறைமேல் மோதி
அமைதியானதங்கே!
நதியை ஏற்றகடலுமங்கே அலையின்றி தழுவி நின்றதே!
நதி கூறும் செய்தி ஒன்று எனக்கு அங்கு
வாழ்நாளில் நானும் பல ஆடி, ஓடி அலைந்தது போதும்
வாழ்நாள் முடிவில் அமைதியாக இயற்கை அன்னையுடன்
இணைந்து விடு என்பதுதான்!
தேவி ஜகா