பொங்கும் கடல்
கடல் மகள் கொண்ட சினம்
காலத்தை வென்ற சினம்
காற்றோடு மழையும் ஒன்று சேரக்
காலனே புகுந்ததனால்
கடல் அலைகள் உயர்ந்தடித்தே
காலமெல்லாம் சேர்த்த பொருள்
கடலுக்கு இரையாக,
காலனுக்கு மக்களெல்லாம்
காற்றாலே உணவாக
காத்திருந்த உயிரினமும்
காணாது உணவையும்
காப்பாற்ற முடியாது உயிரையும்
கார் காலத்தில் இழந்திடவே
காணும் இடம்யாவும்
காலனின் போர்க்கோலம்;
கடிதே மற்றவரும்
காப்பாற்ற வாரீரோ
மீனவரும் மாண்டுவிட்டார்
மீண்டவரும் நீரின்றி உயிர்விட்டார்;
மீளாத துயரமையா மீட்கவே வாரீரோ
மகிழ்ச்சி
சுதந்திரப்பேரொளி கண்ட பாரத
தாய்க்கு மகிழ்ச்சி,
சுற்றத்தை போற்றிக்காத்த வள்ளலை கண்ட
சுற்றத்திற்கு மகிழ்ச்சி,
வளர்ந்த வாழ்வில் உயர்ந்த மக்களைக்கண்ட
பெற்றவர்க்கு மகிழ்ச்சி
வளர்ந்துவிட்ட மாணவனின் திறம் கண்ட
ஆசனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி;
வள்ளலாய் வாரி வழங்கக் காத்திருக்கும்
பயிர்கண்ட உழவர்க்கு மகிழ்ச்சி!
கடல் மகள் கொண்ட சினம்
காலத்தை வென்ற சினம்
காற்றோடு மழையும் ஒன்று சேரக்
காலனே புகுந்ததனால்
கடல் அலைகள் உயர்ந்தடித்தே
காலமெல்லாம் சேர்த்த பொருள்
கடலுக்கு இரையாக,
காலனுக்கு மக்களெல்லாம்
காற்றாலே உணவாக
காத்திருந்த உயிரினமும்
காணாது உணவையும்
காப்பாற்ற முடியாது உயிரையும்
கார் காலத்தில் இழந்திடவே
காணும் இடம்யாவும்
காலனின் போர்க்கோலம்;
கடிதே மற்றவரும்
காப்பாற்ற வாரீரோ
மீனவரும் மாண்டுவிட்டார்
மீண்டவரும் நீரின்றி உயிர்விட்டார்;
மீளாத துயரமையா மீட்கவே வாரீரோ
மகிழ்ச்சி
சுதந்திரப்பேரொளி கண்ட பாரத
தாய்க்கு மகிழ்ச்சி,
சுற்றத்தை போற்றிக்காத்த வள்ளலை கண்ட
சுற்றத்திற்கு மகிழ்ச்சி,
வளர்ந்த வாழ்வில் உயர்ந்த மக்களைக்கண்ட
பெற்றவர்க்கு மகிழ்ச்சி
வளர்ந்துவிட்ட மாணவனின் திறம் கண்ட
ஆசனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி;
வள்ளலாய் வாரி வழங்கக் காத்திருக்கும்
பயிர்கண்ட உழவர்க்கு மகிழ்ச்சி!
No comments:
Post a Comment