பாசமா நேசமா
அன்பில் விளைவது பாசம்
அன்பால் மலர்ந்தது நேசம்
அன்பால் ஆனது உலகம்
அதுவே பலரை இணைப்பது
பாசத்தை அளப்பது அரியது
பாசத்தின் எல்லையோ விரிந்தது
பாசம் தர்மத்தைக் கடந்தது
பாசம் நெஞ்சைத் தொடுவது
பாசம் உதிரத்தில் உறைவது
பாசம் உலகில் தனித்தது
பாசத்தில் பிறந்தது அன்பு
நேசத்தால் அது குறையலாம்
காலத்தால் அது அழியுமோ?
தூரத்தால் அது விலகுமோ?
நேசமே உயிர்க்குத் துனையாம்
நேசமே வாழ்வின் வித்து
பாசமும் நேசமும் இரு கண்களாய்ப்
பாரிலே உன்னை உயர்த்தும்,
பாசம் தந்தது உயிரை,
நேசம் தந்தது உறவை,
பாசமும் நேசமும் சேர்ந்ததே
வாழவைக்கும் இரு கரங்களாம்
பாசத்தை வென்றவன் இல்லை
நேசத்தை விட்டவன் இல்லை
நேசம் காணும் குற்றம்
பாசம் காண்பதில்லை
பாசம் வென்றது உணர்வால்
நேசம் நிலைப்பது உறுதியால்.
No comments:
Post a Comment